Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4164

முருகப்பெருமானை வணங்கிட : முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியையும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிமார்களின் ஆசியையும், அஷ்ட திக்கு பாலகர்களின் ஆசியையும், தேவாதி தேவர்கள் ஆசியையும், தேவதைகளின் ஆசியையும், நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியையும் ஒருங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அறியலாம். சத்திய முருகன் தாளினை போற்றிட சித்திகள் எட்டும் திடமாம் சித்தியே. வள்ளல் முருகனடி வாழ்த்துவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

குரு உபதேசம் – 4163

முருகப்பெருமானை வணங்கிட : பாவபுண்ணியத்தை அறிந்து கடந்த முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்காவிட்டால் பாவபுண்ணியத்தைப் பற்றி கடுகளவும் அறிந்து கொள்ள முடியாது என்பதை அறியலாம். வல்லவன் முருகன் வந்தே உலகில் நல்லதோர் ஆட்சி நடத்திடல் நலமே! ஏங்கி தவிக்கும் ஏழைகள் வாழ பாங்காய் ஆட்சி பகர்வான் முருகனே!

குரு உபதேசம் – 4162

முருகப்பெருமானை வணங்கிட : நாம் செலுத்துகின்ற பக்தியை ஏற்றுக்கொண்டு நாமும் அவனைப்போல் ஆகலாம் என்கிற உண்மையையும் அதற்குரிய வழிமுறைகளை வாய்ப்புகளையும் அறியலாம். விரைந்து வந்தே வேற்படை முருகா சிறந்த ஆட்சி செய்திடல் நலமே.

குரு உபதேசம் – 4161

முருகனை வணங்கிட : ஞானவாழ்வை பெறவும், மரணமிலாப் பெருவாழ்வை பெறவும், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களால் பெற முடியாமல் போனதற்கு காரணம் என்னவெனில் அவரவர் முன்ஜென்மங்களே உயிர்களை கொன்றதாலும், புலால் உண்டதாலும், பிறர் சொத்தை அபகரித்ததாலும், நன்றி மறந்ததாலும், வஞ்சனை செய்து ஏமாற்றியதாலும் இப்படி பலபல வழிகளிலே அவர்கள் செய்திட்ட பாவங்களெல்லாம் பாவவினைகளாக மாறி வாய்ப்பிருந்தும் ஞானத்தைப் பற்றியோ மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியோ அறியவொட்டாமல் தடை செய்கிறது. அப்படியே அறிந்து கொண்டாலும் அந்த துறையில் … Read more

குரு உபதேசம் – 4160

முருகனை வணங்கிட : காலத்தையும் காலனையும் வென்ற கந்தபெருமான் திருவடியைப் போற்றி வணங்கிட காலனை வெல்லும் உபாயத்தினை பெறலாம். அதுவே சிறப்பறிவாகும். நமனை வென்ற ஞானிகள் திருவடியை இமைப்போதும் மறவாது இருத்துவோம் நெஞ்சினுள்.

குரு உபதேசம் – 4159

முருகனை வணங்கிட : ஜீவதயவு, ஜீவகாருண்யம், அன்பு செலுத்தல், தயவு காட்டல், கருணை செய்தல், விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், தீயன மறத்தல், அரவணைத்தல், ஒத்து போதல் என ஜீவர்களுக்கு மகிழ்வையும், நன்மையும் பயக்கக்கூடிய அனைத்து நல்ல பண்புகளுமே முருகன்தான் என்பதை அறியலாம். ஆதலின் உலகினிலுள்ள அனைத்து நற்பண்புகளுமே முருகன் அருள்கொடைதான் அவனே நற்பண்பாய் நம்முள் தோன்றுகிறான், நற்பண்பே முருகனாயும் ஆகிறான் என்பதை அறிவதே சிறப்பறிவு அதை கற்பதே சாகாக்கல்வி. தயவு என்பதே முருகனாகும், முருகப்பெருமானே தயவாகும். அற்புதன் … Read more

குரு உபதேசம் – 4158

முருகனை வணங்கிட : உயிர்க்கொலை செய்யாது புலால் உண்ணாதிருக்கவும் உள்ள வாய்ப்பையும், சைவ நெறிகளை கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வைராக்கியமும் அறிவையும் பெறலாம்.

குரு உபதேசம் – 4157

முருகனை வணங்கிட : முருகப்பெருமானை மனமுருகி பூசித்து ஆசி பெறாவிடில் இந்த உலகினில் அவர் தமக்கு ஒன்றும் இல்லை இல்லை, எதுவுமே இல்லை என்பதை உணரலாம். வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்குவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.   முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும்.