குரு உபதேசம் 4441
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முதுபெரும் ஞானிகள் அருளிய, சிவபுராணம், திருமந்திரம், திருஅருட்பா போன்ற ஞான நூல்களை படித்து பூஜிக்கின்ற ஆர்வம் உண்டாகி பக்தி நூல்களைப் படித்து, மனமுருகி பூஜித்து முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றுகின்ற வைராக்கியம் வரும். முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றி பூஜிக்க பூஜிக்க குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள், சூதாடமாட்டார்கள், பிறர் மதிக்க ஆடம்பரமாக நடந்து கொள்ள மாட்டார்கள், வருவாய்க்கு உட்பட்டு செலவு செய்து சிக்கன வாழ்வை மேற்கொள்வார்கள், கடன் வாங்க மாட்டார்கள், எல்லாம்வல்ல இறைவன் … Read more


