admin
குரு உபதேசம் – 3922
ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும், ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும்.
குரு உபதேசம் – 3921
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நரை, திரை, மூப்பு எனும் இயற்கையை வென்ற முருகப்பெருமானே இவ்வுலகை நேரில் தோன்றி தனது தலைமையில் ஞான ஆட்சியை உண்டாக்கி ஆட்சி செய்யப் போகிறான் என்பதையும் அறியலாம். நரை, திரை, மூப்பை வெல்ல நான்முகனாகிய பிரம்மனும் அறியான். ஆனால் ஞானத்தலைவன் முருகப்பெருமானோ நரை, திரை, மூப்பை வென்று, என்றும் இளமையோடு இருக்கும் வல்லமையை பெற்றவனாவான்.