குரு உபதேசம் – 4154
முருகனை வணங்கிட : நிலையில்லாததை நிலையென்று நம்பி மயங்குகின்ற மயக்கம் நீங்கி எது நிலையானது எது நிலையற்றது என்பதை உணருகின்ற தெளிவான அறிவைப் பெற்று அந்த நிலையான ஒன்றை அடையும் மார்க்கம்தனை உணர்த்துவான் முருகப்பெருமான். வேதியியல் அறிந்த வித்தகன் முருகனை சாதகத்துக்கு துணையென்றே சாற்றுதல் நலமே.


