admin
குரு உபதேசம் 4451
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சுத்தமும், அசுத்தமும் கலந்துள்ள தேகத்தை ஒரு மெல்லிய நுட்பமான வேதியியல் செய்து அசுத்தத்தை நீத்து சுத்த தேகமாகிய ஒளி தேகத்தை உறுதிபடுத்திக் கொண்டவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். இந்த ரகசியத்தை முதன் முதலில் கண்டவன் முருகப்பெருமான்தான். இந்த வாய்ப்பை நாமும் பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு, தினம்தினம் மறவாமல் காலை மாலை என மூன்று வேளைகளும் குறைந்தது பத்து நிமிடமேனும், … Read more
குரு உபதேசம் 4450
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இக்காலத்தில் சாட்சிகள் இல்லாமல் குற்றம் செய்தவர்களும் பணபலம், ஆள்பலம், புகழ், அதிகாரம், பதவி, சிபாரிசு போன்றவைகளின் உதவியினால் நீதியின் பிடிக்கு அகப்படாமல் மனித அளவில் உள்ள சட்டங்களிலிருந்து வேண்டுமானால் தப்பித்து விடலாம். ஆனால் இறைவனின் தீர்ப்பிற்கு முன் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்பதையும், வருங்காலம் ஞானசித்தர் காலமதனாலே ஞானசித்தர் யுகத்தின், ஞானசித்தர் ஆட்சியின் தலைவன் முருகப்பெருமான் என்பதினாலே அவனது ஆட்சியிலே இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, உலகின் பலகோடி இடங்களில் நடப்பவைகளை … Read more
குரு உபதேசம் 4449
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மனிதன் எழுத்தாளன், ஓவியன், கவிஞன், விஞ்ஞானி, கல்வியாளன், பேச்சாளன் என மிகச்சிறந்த வகையிலே திறமைகள் பெற்றிருந்தாலும் அவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திலே இறந்துதான் போவார்கள். என்றும் அழியாத முருகனது திருவடிகளைப் பற்றினால்தான் எதனாலும் பாதிப்படையாமல் மனிதன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4448
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பண்புள்ள அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணிந்து செயல்பட்டு வெற்றி காணும் காலம் வெகுவிரைவில் ஞானிகள் ஆட்சியிலே வரும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4447
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மற்றவர்க்கு இடையூறு செய்யாமலும், பிறர் செய்யும் இடையூறுகளை பொறுத்துக் கொள்ளும் மனநிலையையும் பெறுவார்கள். அதனால் அவனும் அவனைச் சார்ந்தோரும், மகிழ்வுடன் முருகனருளால் வாழ்வார்கள் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4446
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிறந்த யாவரும் ஒருநாள் இறந்தே போக வேண்டும். இது இயற்கையின் நியதியாகும். அத்தகைய இயற்கையின் நியதியினை வென்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வை பெறவேண்டுமானால் எல்லாம்வல்ல ஞானபண்டிதன் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூசித்து முருகனது ஆசியைப் பெற்று விட்டால், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள் முருகப்பெருமானின் ஆசியினாலே மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4445
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பெறுதற்கரிய மானுடப்பிறவியை பெற்ற போதும், நரகமும் சொர்க்கமுமாய் உள்ள காமதேகத்தினில் உள்ள மும்மலக்கசடை முருகனை வணங்க வணங்க வணங்க, முருகனது கருணை கூடி, நீக்க முடியாத தேகக்கசடையும் முருகனருளால் நீக்கிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4444
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தாயினும் மேலான கருணையுடைய தனிப்பெரும் கருணைத் தெய்வம் முருகப்பெருமானே வெகுண்டு எழுந்ததினால் இவ்வுலகினை காத்து நின்ற முருகனது கருணைக்கரம் விலகிவிடுகின்ற படியினாலே மக்கள் இதுவரை செய்த பாவபுண்ணியம் இயற்கை சீற்றங்களாக மாறி, தீயன செய்தோரை கடுமையாக தாக்கத்தான் போகிறது. ஆயினும் மனம் திருந்தி இனியேனும் முருகனது திருவடி பற்றி மனமுருகி வேண்டி அவரவரும் தாம் தாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரி முருகனை அழுது தொழுது வணங்கி மன்றாடி தாம் செய்த … Read more


