குரு உபதேசம் – 3775
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நோயில்லா வாழ்வும், வறுமையில்லா வாழ்வும் முருகன் அருளால் தானே அமையும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நோயில்லா வாழ்வும், வறுமையில்லா வாழ்வும் முருகன் அருளால் தானே அமையும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முன் ஜென்மங்களிலே செய்திட்ட வினைகளின் காரணமாக இடையூறுகள் வந்திட்டாலும் அறப்பணிகளை தளராது தொடர்ந்து செய்திடவும் புண்ணியச்செயல்களை செய்திடவும் துணையாய் உடன் வந்து காத்தருள் புரிவார்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உலக மகா தலைவனாகிய முருகப்பெருமானை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கு இயற்கையின் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்காமல் இடையூறு வரும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானவாழ்வு என்று ஒன்று உண்டென்றால் அது முருகப்பெருமானே ஆவார். முருகப்பெருமானோ புண்ணியமும் அருள்பலமும் உள்ளவர்களுக்குத்தான் அருள்செய்வான். முருகனது அருளைப் பெற்றால்தான் ஞானப்பாதையில் செல்ல முடியும். எவர் புலால் மறுத்து, ஜீவதயவைப் பெருக்கி புண்ணியங்கள் செய்கிறார்களோ அவர்களே ஞானம்தனை அடைய முடியும் என்பதும் உணர்த்தப்படும்.