admin
குரு உபதேசம் – 3816
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதர்களுக்குள் பிளவு உண்டாக்கி ஒருசிலர் ஆதாயம் அடையும்படியாக உருவாக்கப்பட்ட சாதி சங்கங்கள், மதச்சங்கங்கள் அனைத்தும் இல்லாமல் போய் எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக எண்ணுமாறு பொது அமைப்புகளே உண்டாக்கப்படும். சாதிகளின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மதத்தையோ, சாதியையோ, குறிக்குமாறு உள்ளவற்றை எந்தவகையிலும் ஞானபண்டிதனின் ஞானிகள் ஆட்சி ஏற்காது “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் தாரக மந்திரமே உலகெங்கும் பின்பற்றப்படும்.
குரு உபதேசம் – 3815
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பெண்களை தாயாய், சகோதரியாய் பாவிக்காமல் தவறு செய்ய எண்ணினாலே அவர்களது தீய எண்ணங்களுக்கு எல்லாம்வல்ல முருகப்பெருமானின் தண்டனைக்கு ஆளாக நேரிடும். பெண்களை பாதுகாக்காமல் கொடுமைப்படுத்த நினைத்தாலே, நினைப்போர் பூனையின் கையில் அகப்பட்ட எலிபோல் ஆகி பெரும் துன்பத்திற்கும் மீளா துயருக்கும் ஆளாக நேரிடும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3814
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. வளரும் பருவமான பள்ளிப் பருவத்திலேயே மாணாக்கர்களது மனதினுள் பாவபுண்ணியங்களைப் பற்றியும், கடவுள் நம்பிக்கையும் வளர்க்க வேண்டும் என்பதும் அதற்கு சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்ற முதுபெரும் ஞானிகள் நாமங்களை கொண்ட தொகுப்பாய் உள்ள சித்தர்கள் போற்றி தொகுப்பை பள்ளி ஆரம்பிக்கும் முன்னர் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் மனதில் பதியுமாறு பாராயணம் செய்து பின் பள்ளிகளை துவங்கிட மாணவர்களது நாமஜெப பலனால் நாட்டில் பருவமழை தவறாது பெய்து … Read more


