admin
குரு உபதேசம் – 3788
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… மனிதர்கள் ஆட்சியிலே பதவிகளிலும், ஆட்சியிலும் உள்ளோரெல்லாம் மக்களை ஏமாற்றி அடித்த கொள்ளைகள் எல்லாம் முருகப்பெருமானது ஆசியால் மீண்டும் பொதுமக்களுக்கே வந்து சேரும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3787
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய நான்கையும் அறிந்த முருகப்பெருமானே ஆட்சி செய்ய இருப்பதால் முருகப்பெருமானின் தலைமைக்கு கீழ் இயங்கக்கூடிய அத்தனை தொண்டர்களும் பொருள்பற்று அற்றவராகவும், பந்தபாசத்திற்கு ஆட்படாதவர்களாகவும், ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடு அற்றவராகவும், உலக மக்களை சகோதரர்களாக எண்ணுகின்றவர்களாகவும், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்பதை அறியலாம். இவர்களால் தான் சமநீதி, சமத்துவம் உடைய ஆட்சியை உருவாக்க … Read more
குரு உபதேசம் – 3786
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பாவபுண்ணியங்களுக்கும், கடவுளுக்கும் பயப்படாமல் தனக்கு தோன்றியவாறு ஆட்சி செய்திட்ட மனிதர்கள் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்து, ஞானஆட்சி அமைப்பவன் முருகனே என்றும், அவனது ஞான ஆட்சியிலே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்ட மக்களுக்கே தவறாமல் முருகப்பெருமான் திருவடிகளை பூஜை செய்யும் மக்களுக்கே ஜீவதயவுடையோராய் விளங்கி பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்கும் பரோபகாரம் உள்ள மக்களுக்கே ஞான ஆட்சியில் வாய்ப்புகளை முருகன் தருவான் என்பதையும் அறியலாம். முருகனது … Read more
குரு உபதேசம் – 3785
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… துன்பப்படுகின்ற அடியார்கள் முருகனை நினைத்த அக்கணமே தோன்றி, அழைத்த அடியார்களின் துன்பத்தைப் போக்கி அருள்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.


