Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4166

முருகனை வணங்கிட: தன்னைப் பற்றி அறிகின்ற அறிவே சிறப்பறிவாகும் என்றும், அதுவே சாகாக்கல்வி என்றும் அறியலாம். சாகாக்கல்வியை முருகன் அருளினால்தான் பெறக்கூடும் என்றும், முருகன் அருளைப் பெற ஜீவதயவே சாதனமாகும் என்பதையும் உணர்வான். உலக உயிர்களிடத்து எந்த அளவிற்கு ஜீவதயவை செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அந்த ஜீவதயவே தவமாய் மாறி ஜீவதயவின் தலைவன் முருகனது ஆசியைப் பெற்று தவத்தினால் வெற்றி பெற்று தன்னையறியும் சிறப்பறிவான சாகாக்கல்வியை கற்று ஞானம் அடையக் கூடும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 4165

முருகப்பெருமானை வணங்கிட : ஞானம் என்ற சொல்லே முருகன் தான் என்றும் அதுவே உண்மை அறிவு என்பதையும் அறியலாம். மாசற்ற முருகனின் மலரடி போற்றிட ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம்! வெல்லரிய மாயையை வென்ற முருகனை நல்லுணர்வாய் போற்றிட நலமே! ஆற்றலாம் முருகனின் அருளை தினமும் போற்றியே மகிழ்வர் புண்ணியரே!

குரு உபதேசம் – 416

முருகனை வணங்கிட : காலத்தையும் காலனையும் வென்ற கந்தபெருமான் திருவடியைப் போற்றி வணங்கிட காலனை வெல்லும் உபாயத்தினை பெறலாம். அதுவே சிறப்பறிவாகும்.

குரு உபதேசம் – 4164

முருகப்பெருமானை வணங்கிட : முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியையும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிமார்களின் ஆசியையும், அஷ்ட திக்கு பாலகர்களின் ஆசியையும், தேவாதி தேவர்கள் ஆசியையும், தேவதைகளின் ஆசியையும், நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியையும் ஒருங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அறியலாம். சத்திய முருகன் தாளினை போற்றிட சித்திகள் எட்டும் திடமாம் சித்தியே. வள்ளல் முருகனடி வாழ்த்துவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

குரு உபதேசம் – 4163

முருகப்பெருமானை வணங்கிட : பாவபுண்ணியத்தை அறிந்து கடந்த முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்காவிட்டால் பாவபுண்ணியத்தைப் பற்றி கடுகளவும் அறிந்து கொள்ள முடியாது என்பதை அறியலாம். வல்லவன் முருகன் வந்தே உலகில் நல்லதோர் ஆட்சி நடத்திடல் நலமே! ஏங்கி தவிக்கும் ஏழைகள் வாழ பாங்காய் ஆட்சி பகர்வான் முருகனே!

குரு உபதேசம் – 4162

முருகப்பெருமானை வணங்கிட : நாம் செலுத்துகின்ற பக்தியை ஏற்றுக்கொண்டு நாமும் அவனைப்போல் ஆகலாம் என்கிற உண்மையையும் அதற்குரிய வழிமுறைகளை வாய்ப்புகளையும் அறியலாம். விரைந்து வந்தே வேற்படை முருகா சிறந்த ஆட்சி செய்திடல் நலமே.

குரு உபதேசம் – 4161

முருகனை வணங்கிட : ஞானவாழ்வை பெறவும், மரணமிலாப் பெருவாழ்வை பெறவும், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களால் பெற முடியாமல் போனதற்கு காரணம் என்னவெனில் அவரவர் முன்ஜென்மங்களே உயிர்களை கொன்றதாலும், புலால் உண்டதாலும், பிறர் சொத்தை அபகரித்ததாலும், நன்றி மறந்ததாலும், வஞ்சனை செய்து ஏமாற்றியதாலும் இப்படி பலபல வழிகளிலே அவர்கள் செய்திட்ட பாவங்களெல்லாம் பாவவினைகளாக மாறி வாய்ப்பிருந்தும் ஞானத்தைப் பற்றியோ மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியோ அறியவொட்டாமல் தடை செய்கிறது. அப்படியே அறிந்து கொண்டாலும் அந்த துறையில் … Read more

குரு உபதேசம் – 4160

முருகனை வணங்கிட : காலத்தையும் காலனையும் வென்ற கந்தபெருமான் திருவடியைப் போற்றி வணங்கிட காலனை வெல்லும் உபாயத்தினை பெறலாம். அதுவே சிறப்பறிவாகும். நமனை வென்ற ஞானிகள் திருவடியை இமைப்போதும் மறவாது இருத்துவோம் நெஞ்சினுள்.