Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4375

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இவ்வுலகினிலே மனிதர்களை மனிதர்கள் ஆட்சி செய்து செய்து, ஏராளமான வகையிலே ஒருவரை ஒருவர் அதிகாரத்தாலும், பணபலத்தாலும், ஆள்படையின் துணையினாலும் அளவு கடந்த வகையிலே துன்பப்படுத்தி விட்ட காரணத்தாலே பண்புடையோரும், பக்தர்களும், பத்தினி பெண்டிரும், பஞ்சபராரிகளும் துன்பம் தாளாது மனதினுள் இறைவனை அழுது தொழுததினாலே, எல்லாம்வல்ல இறைவன் முருகப்பெருமான் மனமிரங்கி இவ்வுலகினில் வெகுவிரைவில் ஞானஆட்சியை ஞானிகள் தலைமையிலே அமைக்க இருக்கிறார் என்பதை அறியலாம். ஞானஆட்சியிலே ஜீவதயவே அடிப்படையாக இருக்கும் என்பதையும், … Read more

குரு உபதேசம் 4374

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானின் திருவடிகளை உலக மக்கள் எந்த அளவிற்கு வணங்குகிறார்களோ, முருகப்பெருமான் தலைமையை எந்த அளவிற்கு மக்கள் விரைவில் ஏற்கிறார்களோ, முருகப்பெருமானை ஞான ஆட்சி அமைக்க எந்த அளவிற்கு மக்கள் மனம் உருகி அழைக்கின்றார்களோ, அந்த அளவிற்கு  முருகப்பெருமான் விரைந்து வெளிப்பட்டு இவ்வுலகினில் ஞானியர் கூட்டம் புடைசூழ தேவாதி தேவரெல்லாம் ஒன்றுகூடிய  ஞான ஆட்சியை இவ்வுலகினில் அமைப்பான் என்பதை உணரலாம். உலக மக்களே! அழையுங்கள் ஆறுமுகனை ஆட்சி அமைக்க. உலக … Read more

குரு உபதேசம் 4373

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது தலைமையில் முருகனது தொண்டர்களால் இந்நாடு ஆட்சி செய்யப்பட்டால், நாடெங்கும் புண்ணியமும் அருள்பலமும் பெருகி எல்லோரிடத்தும் ஜீவதயவு உண்டாகி நாடெங்கும் பருவமழை தவறாது பெய்து எங்கு பார்த்தாலும் நல்ல விளைச்சலும், பசுமையும் மிகுந்து காணப்பட்டு அந்த நாட்டிலுள்ள மனிதர்கள் சொர்க்க வாழ்வை வாழ்வதோடு அந்நாட்டிலுள்ள அனைத்து உயிர்களாகிய எல்லா ஜீவராசிகளும் மகிழ்வுடன் வாழ்கின்ற ஒரு சொர்க்கமயமான வாழ்வை வாழ்கின்ற அமைப்பை பெறலாம் என்பதை அறிவார்கள். முருகப்பெருமானின் ஆசியை பெறபெற … Read more

குரு உபதேசம் 4372

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. கற்புடைய பெண்களை கற்பழிப்போர், கலப்படம் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், அதிகாரத்தின் துணையோடு பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்கிறவர்களும் பொது சொத்தை அபகரித்து வாழ்பவரும் அசுரர்களாக கருதப்பட்டு முருகப்பெருமானால் தண்டிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள்.

குரு உபதேசம் 4371

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. தற்காலத்தில் தவறு செய்வோர் தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர் ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம். மணிவாசகப் பெருமானின் மலரடி போற்றிட அணிமா சித்தியும் அடைவார் திண்ணமே. மகத்துவம் மிக்கதோர் மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம்.

குரு உபதேசம் 4370

முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தொல்லுலகில் நல்லோர்கள் படுகின்ற துன்பத்தை காணச் சகியாமல் ஞானபண்டிதனே நேரில் தோன்றி நல்லோரை காப்பான் என்பதும் உண்மையே, கலியுகம் முடித்து ஞானயுகமதனை அமைப்பான் என்பதும் உண்மையே.  

குரு உபதேசம் 4369

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பொது சொத்தை அபகரிக்காமல் தப்பிக்கலாம், பொதுசேவை மனப்பான்மையுடையவராய் ஆகலாம், தேச விரோதமான செயல்களை செய்யாமல் தப்பிக்கலாம், தமக்கு கொடுக்கப்பட்ட பதவி அதிகாரங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யும் எண்ணம் வரும். அதன் மூலம் அவரவரும் தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.  

குரு உபதேசம் 4368

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு மனிதனுக்கு விடாத பிறவிகளை உண்டுபண்ணுவது அவனது காமதேகமே காரணம் என்பதை அறியலாம். …………….. காமனைக் கடிந்த கந்தனின் நாமத்தைச் சொல்லிட நமனும் அஞ்சுவன்.