குரு உபதேசம் 4367
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பஞ்சமகா சக்திகளும் முருகனின் ஆணைக்கு உட்பட்டு நடப்பதினாலே, நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பஞ்சமகா சக்திகளும் முருகனின் ஆணைக்கு உட்பட்டு நடப்பதினாலே, நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், நவகோடி சித்தரிஷி கணங்களுக்கும், தலைவனான முருகப்பெருமான் நேரில் தோன்றி ஞானசித்தர் காலத்தை வழி நடத்துவான் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானசித்தர்கள் காலமாகிய வருங்காலங்களிலே பண்புடையோர்களால்தான் ஆட்சி செய்யப்படும் என்பதையும், அத்தகைய பண்புடையோரை முருகப்பெருமானால் அரூபநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அற்புதமாய் ஆட்சி பொறுப்பிலே அமர்த்தப்படுவார்கள் என்பதையும் அறியலாம். ஆட்சி பொறுப்பை பண்புள்ளவர்கள் தகுதிகளை பெற, அவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவத்தை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டுமென்றும், பொது சொத்து அனைத்தும் மக்களது வரிப்பணத்தினால் ஆக்கப்பட்டது என்பதனால் அது இறை சொத்து, அதாவது சிவன் சொத்தாகும் என்பதை அறிந்தவராயும், பொது … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வின் ரகசியத்தை அறியலாம். தொடர்பிறவிக்கு காரணமாய் இருப்பது உடம்பா? உயிரா? என ஆராய்ந்து பார்க்கும் போது உடல் மாசு காரணமாகத்தான் உயிர் மாசுபடுகிறது. உடல் மாசு நீங்கினால் உயிர் மாசு நீங்கும். உடல்மாசும் உயிர்மாசும் நீங்கி இனி பிறவாமையை அடைய விரும்புகிறவர்கள் ஞானபண்டிதன் முருகப்பெருமானின் ஆசியைப் பெறவேண்டும். முருகனது ஆசியைப் பெற விரும்பினால் தினமும் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இயற்கை சீற்றங்கள் வருவதற்கு முன்னரே தன்னையும், தன்னை சார்ந்தோரையும் காக்கின்ற ஆற்றலும், அறிவும் வரும். இடர் செய்கின்ற அசுரர்களாகிய முரண்பட்ட மக்களிடத்திருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம். பிற உயிர்களுக்கு ஜீவதயவின்றி கொடுமைகள் செய்கின்றவனும், இடையூறு செய்கின்றவர்களும் அசுரர்கள் என்றும், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் செலுத்தி ஜீவதயவை வளர்ப்பதோடு ஞானியர் திருவடித் துணை உடையவர்கள் தேவர்கள் எனவும் அறியலாம். கடவுள் நம்பிக்கையும், பாவ புண்ணியத்தில் நம்பிக்கையும் உள்ளவர்கள் … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒருமுறையேனும் “முருகா” என்று முருகனின் நாமத்தை மனமுருகி சொல்லிவிட்டால் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், அன்னதானம் செய்கின்ற அறிவும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். …………….. வித்தகன் முருகனை விரும்பியே பூசிக்க சத்தும் சித்தும் கைவசமாமே.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் … ஞானிகள் ஆட்சியில் பங்கு பெறவும், ஞான ஆட்சியில் துன்பமின்றி வாழவும் விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து மாதம் ஒருவருக்கேனும் அன்னதானம் செய்தும், ஞானியர் திருவடி பூஜைகளை தவறாது செய்தும் தானதருமப் பணிகளுக்கு தொண்டுகள் செய்தும் வரவர, எந்தவித அச்சமும் இல்லாத வாழ்வை ஞானிகள் ஆட்சியில் வாழலாம்.