Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4360

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் … முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே தர்மஸ்தாபனத்தில் தொண்டுகள் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டர்கள் மீது குறை காண்பவர்கள் முருகப்பெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும், தொண்டர்களிடையே உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் இது சகஜம் என்றும், சாந்தமாக இருந்து செயல்புரிய வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் குறைகள் கூறினால் தர்மசெயல்கள் பாதிக்கப்படும் என்றும், தர்மம் பாதித்தால் தர்மதேவனாகிய முருகப்பெருமான் நம்மை தண்டிப்பான் என்பதையும் உணர்ந்து குறைகளை பொறுத்துக் … Read more

குரு உபதேசம் 4359

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் … ஆயிரம் கோடி அசுரர்களை நொடியில் அழித்து பண்புள்ள மக்களை காக்கின்ற வல்லமையுடைய வல்லவன்தான் முருகப்பெருமான். ஆயிரம் தாயினும் மிக்க தாயன்புடையவன் முருகப்பெருமான், அவன் கருணைக்கடல், தயவே வடிவானவன்தான். ஆனால் பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்பவர்களை கண்டால் நொடிப்பொழுது தாங்கமாட்டான், அவன் கோபம் எல்லையில்லாமல் போய்விடும். தற்காலம் பண்புள்ளோர் மிகுந்த கொடுமைக்கு உள்ளாகியுள்ளதால் அனைவரையும் காக்க முருகப்பெருமானே நேரில் அவதாரமாக தோன்றியுள்ளான். இனிவரும் காலமெல்லாம் இவ்வுலகம் ஞானபண்டிதனாரின் நேரடி … Read more

குரு உபதேசம் 4358

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்திட்டால்… ஒருவனது இலட்சியம் உலக நன்மைக்காக இருக்குமானால், உயர்ந்த நோக்கமாக இருக்குமானால் அதை முருகப்பெருமான் அருளால் செய்து முடிக்கலாம். …………….. பாலனாம் முருகனை பணிந்தே போற்றிட ஞாலத்தை ஆள்வார் நமனும் அஞ்சுவன்.

குரு உபதேசம் 4357

முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெற்றிட்டால் … சிவராஜயோகம், ராஜயோகம் என்பவை பெரும் தவசிகளுக்கே, முருகனது அருளை முழுமையாக பெற்றவர்களுக்கே உரியது என்றும் மண், பெண், பொன்னாசைகளை விட்டவர்க்கே இவை கைகூடும் என்றும் சிவராஜயோகம், ராஜயோகம் என்ற பெயரிலே சொல்லிக் கொடுப்பதாக மக்களை நம்ப வைப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்றும், ராஜயோகம் உணர்வால் உணர்த்த ஆசான் உடம்பின் உள்ளே சார்ந்திருந்து செய்யப்படுகின்ற மிகப்பெரும் யோகம் என்பதையும் அறியலாம். யோகம் கற்றுக் கொடுப்பதல்ல, ஆசான் உள்ளிருந்து உணர்த்த உணர்ந்து வழிநடத்த … Read more

குரு உபதேசம் 4356

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் … சைவ உணவில் நம்பிக்கையும், சைவ உணவை உண்ணுகின்ற வாய்ப்பையும் அசைவத்தை உண்ணாது சைவத்தில் தொடர்ந்து வைராக்கியமாக வருகின்ற வாய்ப்பையும் பெறுவதோடு முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி இடைவிடாது தொடர்ந்து பூஜை செய்கின்ற வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெறலாம் என்று அறியலாம். …………….. சைவத் தலைவன் சண்முகனைப் போற்றிட வையகம் போற்ற வாழ்வார் திண்ணமே. தூய்மையாம் முருகனை தோத்திரம் செய்திட வாய்மை குணமோடு வருகுமே நன்மை.

குரு உபதேசம் 4355

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இனிவரும் காலமெல்லாம் பந்தபாசத்தினால் உந்தப்பட்டு மயக்கத்தினால் ஆட்சி செய்தோர் விலகி, பந்த பாசமற்ற பொதுநலனில் அக்கறையும் தன்னலமற்ற தொண்டர்களும் முருகனது தலைமையிலே இவ்வுலகை ஆட்சி செய்வார்கள் என்பதை அறிவதோடு அந்தவித ஞான ஆட்சியில் முருகப்பெருமானின் அருளைப் பெற்ற சான்றோர்களே, பண்பாளர்களே இவ்வுலகை வழிநடத்தி அற்புதமாய் ஆட்சி செய்வார்கள் என்பதையும், முருகனது அருளைப் பெற்றால் நாமும் அந்த அற்புத உலகினிலே தொண்டு செய்கிற வாய்ப்பை பெறலாம் என்பதையும் அறியலாம். …………….. … Read more

குரு உபதேசம் 4354

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்… ஞானசித்தர்கள் ஆட்சியான முருகப்பெருமானே நேரில் தலைமையேற்கிற ஆட்சியிலே தவறு செய்பவர்கள் எவ்வளவு புகழ் வாய்ந்தவராயினும் சரி, எவ்வளவு செல்வம் படைத்தவராயினும் சரி, எவ்வளவு ஆள் பலம் உள்ளவராயினும் சரி, எவ்வளவு அதிகார பலம் உள்ளவராயினும் சரி, தவறு செய்துவிட்டால் புலியைக் கண்ட ஆடு நடுங்குவது போல தண்டனைக்கு பயந்தே ஆக வேண்டும். உறுதியாக நீதியின் முன் அவருக்கு தண்டனை கிடைக்கும் என்பதை உறுதியாக அறியலாம். …………….. உறுதியாம் முருகனை உருகியே … Read more