admin
குரு உபதேசம் – 3754
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உலக மகா தலைவனாகிய முருகப்பெருமானை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கு இயற்கையின் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்காமல் இடையூறு வரும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3753
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானவாழ்வு என்று ஒன்று உண்டென்றால் அது முருகப்பெருமானே ஆவார். முருகப்பெருமானோ புண்ணியமும் அருள்பலமும் உள்ளவர்களுக்குத்தான் அருள்செய்வான். முருகனது அருளைப் பெற்றால்தான் ஞானப்பாதையில் செல்ல முடியும். எவர் புலால் மறுத்து, ஜீவதயவைப் பெருக்கி புண்ணியங்கள் செய்கிறார்களோ அவர்களே ஞானம்தனை அடைய முடியும் என்பதும் உணர்த்தப்படும்.
குரு உபதேசம் – 3752
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இதுநாள் வரையிலும் மனிதர்கள் ஆட்சியிலே நடந்த கொடுமைகளெல்லாம் ஒரு முடிவிற்கு வந்து எல்லா மக்களும் ஒரு அற்புதமான வாழ்வை ஞானசித்தர் காலத்தில் வாழலாம் என்பதை அறியலாம்.


