admin
குரு உபதேசம் – 4069
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதனாய் பிறந்தவன், தான் கற்ற ஏட்டுக் கல்வியின் பயனால் பெரிய விஞ்ஞானியாக இருக்கலாம், பெரிய அறிவாளியாக இருக்கலாம், பெரிய தொழில் அதிபனாக இருக்கலாம், ஏன் இன்னும் அநேகம் அநேகம் திறமை உடையவராய் கூட இருக்கலாம். ஆனால் முருகனை வணங்காதவர்களுடைய அறிவு பொய்யறிவு, அவனது செல்வமும் அழியக்கூடிய செல்வமே. அதுவும் தமிழனாய் பிறந்தும் ஒருவன் முருகப்பெருமானை குருவாய் தெய்வமாய் ஏற்று வணங்காமல் பல்வேறு தெய்வங்களை வணங்குவதும் அல்லது தெய்வ நம்பிக்கையே … Read more
குரு உபதேசம் – 4068
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞாயிறு காலை திருவிளக்கு பாராயண பூஜை செய்கின்ற அன்பர்கள் வீட்டில் ஏற்றும் ஜோதியில் எல்லாம் வல்ல ஞானத்தலைவன் அன்பர்தம் பக்தி விசுவாசத்திற்கும் பூஜை பலனிற்கு ஏற்பவும் விரைந்து தோன்றி அருள் செய்வார் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 4036
வாழ்வில் சைவ உணவு மேற்கொண்டு, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று காலை பத்து நிமிடங்களும் மாலை பத்து நிமிடங்களும் முடிந்தால் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு பத்து நிமிடமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல இந்த மகாமந்திரத்தை ஜெபித்து வரவேண்டும்.
குரு உபதேசம் – 4032
உலக மகா தலைவன் முருகப்பெருமான்தான் என்றும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியை பற்றினாலன்றி, அவனருள் பெற்றாலன்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்ற நிதர்சனமான உண்மையை தெரிந்து கொள்ளலாம்.


