Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4017

முருகன் அருள்கூடி தான தருமங்களை தவறாது செய்து செய்து, முருகனின் அருளாசிகளைப் பெற்றும் பிற உயிர்களின் மனமகிழ்வை பெற்றாலும், நாம் அருள் பெற தடையாய் இருப்பது முதலில் நாம் உண்ணுகின்ற உணவிலேதான் பெரும்பாவம் செய்கிறோம் என்பதை உணர்வான். ஆதலினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து முதலில் சைவத்திற்கும், பிறகு சுத்த சைவத்திற்கும் அதன் பின் வீரசைவ நெறிக்கும் அதன்பின் அதிவீர சைவநெறிக்கும் வந்து காமத்திற்கு காரணமாய் உள்ள இத்தேகத்தினை கட்டுப்படுத்தி காமத்தினால் விளையும் வினைகளை குறைத்திடுவான்.

குரு உபதேசம் – 4016

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் ஆசியைப் பெற வேண்டுமானால், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், முருகனது அருளால் வருகின்ற ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறலாம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 4015

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முன்ஜென்மத்தினில் செய்த பாவ வினைகளால் பீடிக்கப்பட்டு எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், சொற்குரு துணையால் தூண்டப்பட்டு “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனமுருகி ஆதி ஞானத்தலைவன் முருகனது திருவடிகளைப் பற்றி சொல்லி விடுவானேயாகில், எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பிரபஞ்ச தலைவர் முருகப்பெருமானது அருள்பார்வையினால், அவனது பாவங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனி விலகுவது … Read more