குரு உபதேசம் 4573
முருகப்பெருமானை வணங்கிட: ஒருவனது செயல் மற்ற உயிர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்குமேயானால் அதுவே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் என்பதை அறியலாம். முக்திக்கு தலைவன் முருகனென்றே அறிந்தபின் பக்தி செலுத்தி பயன்பெறுதல் நலமே!
முருகப்பெருமானை வணங்கிட: ஒருவனது செயல் மற்ற உயிர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்குமேயானால் அதுவே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் என்பதை அறியலாம். முக்திக்கு தலைவன் முருகனென்றே அறிந்தபின் பக்தி செலுத்தி பயன்பெறுதல் நலமே!
அகத்தீசனை வணங்கிட: ஒரு செயல் செய்தால் அந்த செயல் தனக்கும் தன்னை சார்ந்தவர்க்கும், தனது ஊருக்கும், தனது நாட்டிற்கும், உலகத்திற்கும் நன்மை தரக்கூடியதான செயலை செய்வதே சிறந்த அறிவு என்று உணர்தலும், எந்த செயல் எல்லோருக்கும் பயனளிக்கும் என்பதை ஆராய்ந்து செயல்படுகின்ற அறிவையும் பெறலாம்.
முருகனை வணங்கிட: மும்மலக் குற்றத்தாலான தேகமே தொடர் பிறவிக்கு காரணமாய் உள்ளதை அறிந்து முதன் முதலில் மும்மலக்குற்றத்தை நீக்கிக் கொண்டு ஒளிதேகம் பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட குற்றமற்ற வாழ்வும் நற்குணமும் உண்டாம்.
அகத்தீசனை வணங்கிட: உயர் பிறப்பாகிய மனித தேகம் பெற்றவர்கள் இளமை இருக்கும்போதே தக்க ஆசானைத் தேடி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவை பெறலாம்.
முருகனை வணங்கிட: முருகனே சத்தும் சித்துமாக இருப்பதை அறியலாம். வித்தகன் முருகனடியை விரும்பியே போற்றிட சத்தும் சித்தும் கைவசமாமே. இடைபின் கலைநடுவில் இயங்கிடும் சுழிமுனையை தடையற கண்டிட தான் அவனாமே.
அகத்தீசனை வணங்கிட: தாய்மை குணம் உள்ள அகத்தீசனை பூசித்து ஆசி பெற நினைப்பதே சிறந்த அறிவாகும் என்பதை அறியலாம்.
அகத்தீசனை வணங்கிட: தெய்வத்தின் பெயரால் உயிர்களை கொலை செய்வது, பாவம் என்று அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கிட: கொடுக்கக் கூடிய மனமும் அதற்குரிய வாய்ப்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக்கூடிய அறிவையும் முருகப்பெருமான்தான் அருள்வான் என்பதையும் அறியலாம். பாடுபெறும் திருவடியை பணிந்தே பூசிக்க வீடுபேறு உண்டாம் விளம்பு.