Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 344

காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய் ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி – 344   காற்று உறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய் ஆற்ற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !   காற்றின் உள்ளே நுண்ணிய சக்தியாக அமைந்த காற்றாகவும், அந்தக் காற்று நிலைப்பெற்று நிற்பதற்கான மூல ஆதாரமாகவும் விளங்கி, மிகுந்த ஆற்றலுடன் தொடர்ந்து பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 342

காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி – 342   காற்றினுள் காற்றாய்க் காற்று இடைக் காற்றாய் ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி   காற்றின் உள்ளே அடங்கியிருக்கும் நுட்பமான காற்றாகவும், அந்தக் காற்றின் இடைவெளிகளிலும் சக்தியாக நிறைந்து, மிகுந்த ஆற்றலுடன் உயர்ந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 340

விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய் அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி – 340   விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய் அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி !   வெளியின் உள்ளே அடங்கியுள்ள நுண்ணிய வெளியாகவும், அந்தப் பரந்த ஆகாயத்திற்கே ஆதாரமான மூல ஒளியாகவும் விளங்கி, எங்கும் நெருங்கிப் பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 338

விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய் அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி – 338   விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய் அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி !   அண்டவெளியின் உள்ளே மற்றொரு வெளியாக (ஆகாயமாக), அந்த வெளியின் மையத்திலும் (நடுவிலும்) ஜோதிச் சொரூபமாக, எங்கும் இடைவெளியின்றி நெருங்கிப் பூரணமாக நிறைந்திருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 336

உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி – 336   உலகெல்லாம் பரவ என்னுள்ளத்து இருந்தே அலகு இலா ஒளி செய் அருட்பெருஞ்ஜோதி !   உலக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்திப் புகழும்படி, என்னுடைய உள்ளத்திலேயே நிரந்தரமாக வீற்றிருந்து, அளவிட முடியாத ஞான சக்தியையும், ஒளியையும் என்னுள் வெளிப்படுத்திய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 334

அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி – 334   அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட அருட் சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி !   அருள் என்னும் பெருமைக்குரிய பெயரைச் சூட்டி, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்ந்து மலர்ச்சி அடையுமாறு, அருளால் உண்டான அரிய சிறப்புகளையும் எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 332

விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி – 332   விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே அருட்பேறு அளித்த அருட்பெருஞ்ஜோதி   உலகியல் பற்று (விருப்பு) மற்றும் அதனுடன் முரண்படும் வெறுப்பு ஆகிய இருவிதமான மன சலனங்களையும் நீக்கி, அருளை மட்டுமே நிரந்தரமான பெரும் பயனாக எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 330

சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி – 330   சுருள் விரிவுடை மனச் சுழல் எலாம் அறுத்தே அருள் ஒளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி !   சுருங்குதல், விரிதல் என நிலையற்று அலைந்து திரியக்கூடிய மனதின் சலனங்கள் அனைத்தையும் நீக்கி, என்னுடைய உள்ளத்தில் அருள் என்னும் ஞான ஒளியை முழுவதுமாக நிரப்பியருளிய அருட்பெருஞ்ஜோதியே!