Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4322

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : யுகயுகமாக ஞானத்தின் தலைவனாக வீற்றிருந்து அருள் செய்து நவகோடி சித்தரிஷி கணங்களை உருவாக்கியது முருகன்தான் என்ற உண்மையை அறியவிடாமல் செய்தது, நாம் இதன் முன் செய்த பாவங்களே என்றும், நாம் செய்த பாவமே உண்மை ஞானத்தலைவனை அறிய ஒட்டாமல் சிறுதெய்வ வழிபாடு போன்ற பல வழிகளிலே நம்மை அழைத்துச் சென்று மேலும் பாவியாக்கியது என்பதையும் அறிந்து முருகனது பெருமையை உணரவும், அவனது அருளைப் பெறவும் முருகனருள் கூடினாலன்றி … Read more

குரு உபதேசம் 4321

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அறம், பொருள், இன்பம், வீடுபேற்றினை அறிவதற்கும், அதை கடைப்பிடித்து வெற்றி பெறுவதற்கும் முருகப்பெருமானின் திருவடியே துணை என்று அறிகின்ற அறிவைப் பெறலாம். ……………… காக்கும் குணவான் கந்தனை போற்றிட ஆக்கமும் உண்டாம் அருளும் சித்திக்கும். சித்திக்கும் முருகனின் திருவடி போற்றிட முத்தியும் உண்டாம் முனையும் திறந்திடும். சத்தியவான் முருகனின் தாளிணைப் போற்றிட சித்தியும் முத்தியும் சிவகதி உண்டாம். உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட கண்டவர் கண்ட கருத்து இதுவாகும்.

குரு உபதேசம் 4320

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஆறறிவு படைத்த மனிதன் சிறப்பறிவு உடைய மனிதனாக மாறிட வேண்டுமாயின் ஜீவதயவை கடைப்பிடித்தாலன்றி இயலாது. ஜீவதயவை கடைப்பிடிக்க கடைப்பிடிக்க சிறப்பறிவு உண்டாகும். ஆகையினால் சிறப்பறிவு உண்டாவதற்கு ஜீவதயவே முக்கியம். ஜீவதயவை பெறுவது எப்படி? பெரும் முயற்சி ஏதும் தேவையில்லை, முருகனருளால் அதை எளிமையாக பெறலாம். மூன்றே மூன்று கொள்கை மட்டுமே. அவை 1. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். 2. சிறப்பறிவை அளிக்க … Read more

குரு உபதேசம் 4319

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும் ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும். அதிலும் மகான் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம், திருப்புகழ், நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுபடை போன்ற நூல்கள் படிப்பது முருகனது அருளை பெற மிகவும் பயனுள்ளது என்பதும் முருகனைப் பற்றிய இந்த நூல்களை படித்து அதன்படி நடந்திட வெகுவிரைவில் ஞானமடையலாம் என்பதையும் … Read more

குரு உபதேசம் 4318

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : நவகோடி சித்தரிஷி கணங்கள் அனைவருமே முருகப்பெருமானின் தாயினும் மிக்க தயவுடை தனிக்கருணையைப் பெற்று முருகனை வணங்கி வணங்கி ஞானிகளானார்கள் என்பதும், ஞானிகள் முற்றுப்பெற்று முருகப்பெருமானோடு இரண்டற கலந்து விட்டனர் என்பதையும் அறியலாம். ஆதலினால் ஞானபண்டிதனின் திருவடியைப் பற்றி பூஜிப்பதும், அகத்தியர் முதல் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், அரங்கர் வரையிலான ஞானிகளில் எவர் திருவடியைப் பற்றி பூஜித்தாலும் அந்த பூஜையும் முருகனை வணங்கினதாகவே ஆகும் என்றும், ஞானிகள் இயற்றிய நூல்கள் … Read more

குரு உபதேசம் 4317

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமானை பூஜிக்க பூஜிக்க குருவருளைப் பெற்று ஞானசித்தர் காலத்தில் வாய்ப்பை பெற்றும், பெற்ற வாய்ப்பை பயன்படுத்தி கடைத்தேறிடவும் அருள்வான் முருகன். ஐய்யன் முருகனின் அருளைப் போற்றிட வையகம் போற்ற வாழ்வர் திண்ணமே. திண்ணிய முருகனின் திருவடி போற்றிட எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே. சித்தியாம் முருகனின் திருவடி போற்றிட சத்தும் சித்தும் கைவசமாமே. ஆகுமே சித்திகள் அனைத்தும்  சித்திக்கும் வேகுமே வினைகள் வெந்தே வீழ்ந்திடும். சிவவாக்கியன் திருவடியை … Read more

குரு உபதேசம் 4316

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : புண்ணிய பலம் பெருகுவதற்கும், அருள் பலம் பெருகுவதற்கும் வழிவகைகளை செய்வான் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம். முருகனருள் கூடின் புண்ணிய பலமும், அருள் பலமும் தாமே பெறலாம் என்பதையும் அறியலாம். முருகனது அருளைப் பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினம் தினம் தவறாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” … Read more

குரு உபதேசம் 4315

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : நடைபெற உள்ள ஞானசித்தர் ஆட்சிக்கு தலைமை தாங்குகின்றவன் முருகப்பெருமானே என்று அறிகிற அறிவைப் பெறுவதோடு, அவனது திருவடிப் பற்றி பூஜைகள் செய்து ஆசி பெற்றிட்டால் ஞானசித்தர்கள் ஆட்சியிலே முருகனருளால் நாமும் தொண்டு செய்து நற்கதி அடையலாம் என்று அறியலாம். ……………… ஆக்கமாம் முருகனின் அருளைப் போற்றவே நோக்கம் அனைத்தும் நொடியில் சித்தியே! சித்தியாம் முருகனின் திருவடியைப் போற்றிட சத்தும் சித்தும் கைவசமாகுமே. ஆகுமே நல்வினை அனைத்தும் சித்திக்கும் வேகுமே … Read more

குரு உபதேசம் 4314

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமான் அவதாரமாக தோன்றி, கலியுகத்தை முடித்து ஞானயுகம் அமைப்பார் என்பதை அறியலாம். முருகப்பெருமானின் தலைமையில் வழிவழி வந்த திருக்கூட்ட மரபினராம் அகத்தியர் முதல் அரங்கர் வரை உள்ள எல்லா ஞானிகளும் ஒன்றிணைந்து இவ்வுலகை மாற்றி ஞான ஆட்சியை ஏற்படுத்துவார்கள் என்பதையும் அறியலாம். ஞான ஆட்சியிலே பண்புடைய முருகனின் தொண்டர்களே பங்கு பெறுவார்கள் என்றும், அந்த பண்புள்ள தொண்டர்களே இவ்வுலகை முருகப்பெருமானின் தலைமையில் ஆட்சி செய்து உலகை வழிநடத்தி காப்பார்கள் … Read more