Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4313

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமானை வணங்க வணங்க, முருகனது ஆசியால் மனிதன் எடுக்கும் முடிவுகள் குற்றமுடையதாகத்தான் இருக்கும் என்றும் அதிலே உள்ள குறைகள் தெரியாது என்றும், முருகனது அருளைப் பெற்றால் அவரவர் முடிவுகளிலே உள்ள குறைகள் தெளிவாக தெரிந்து கொண்டு செயல்படலாம். முருகனது அருள் கூடினால் எல்லா செயல்களிற்கும் காரணம் முருகனின் ஆசிகளே என்றும், அவனது ஆசியால்தான் அனைத்தும் நடக்கின்ற உண்மையையும் உணரலாம். எல்லாமாகி நிற்கின்ற முருகனிடம் சரணாகதி அடைந்திட்டால் தயவுடைத் தெய்வம் … Read more

குரு உபதேசம் 4312

முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்றிட்டால் : நமக்கு வருகின்ற பிரச்சனைகளை விரைந்து புரிந்து கொள்ளவும், அதற்கான முடிவுகளையும் தீர்வுகளையும் உடனுக்கு உடன் செய்து முடிக்கலாம் என்பதையும் அறியலாம். ……………… கள்ளமும் இல்லை கருத்தில் தெளிவுண்டாம் வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்கிட. காலனை வென்ற கந்தனைப் போற்றிட ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே.

குரு உபதேசம் 4311

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பொறாமை, பேராசை, புலால் உண்ணுதல், மது அருந்துதல், திருடுதல், அராஜகம் செய்தல் போன்ற தீய பழக்கங்களே மனிதனை குற்றவாளிகளாக ஆக்குவதையும், முருகனருளால் தீவினைகள் அகன்று தீய செயல்களிலிருந்து தப்பிவிடலாம் என்பதை அறிந்து முருகனை வணங்க வணங்க, தவற்றிலிருந்தும் தப்பிவிடலாம், தவறு செய்து தண்டனைக்கு ஆளாகாமலும் தப்பிவிடலாம். ஞானசித்தர் காலத்திலே அவரவரும் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாயின் தவறு தெரியாமல் செய்துவிட்டாலும் அவர்களும் பெருங்கருணைத்தாய் முருகப்பெருமானின் திருவடிகளில் மனம் … Read more

குரு உபதேசம் 4310

முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பண்பாளர்கள், பத்தினி பெண்டிர்கள், பஞ்சபராரிகள், சான்றோர்கள், பக்தர் என அனைவருக்கும் முருகப்பெருமானின் பாதுகாப்பை பெறலாம் என்பதை அறியலாம். ……………… அண்டங்கள் போற்றும் அறுமுகன் திருவடியை கண்டவர்கள் போற்றியே காண்பார் உண்மையே. ஆற்றின் மணலை அளவிடினும் முருகனின் பேற்றை அறிய பெரும்பாடாகுமே. சங்கர மகரிஷி தாளிணை போற்றிட திங்களும் இரவியும் சேரும் உண்மையே.

குரு உபதேசம் 4309

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : “ஜீவதயவு” என்ற சொல்லே முருகப்பெருமானின் திருவருளால்தான் வந்தது என்பதை அறியலாம். ……………… மாற்றமாம் முருகனின் மலரடி போற்றிட ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட கண்டவர் கண்ட கருத்தே.

குரு உபதேசம் 4308

முருகப்பெருமானின் ஆசி பெற்றிட்டால் : பொதுமக்களின் வரிப்பணத்திலே அரசினால் பொதுமக்களுக்காக உருவாக்கியதும், பொதுமக்கள் நலனிற்காகவும் உண்டாக்கிய, பொது சொத்துகளாகிய இரயில் பாதைகள், சாலைகள், பேருந்துகள், இரயில் வண்டிகள், விமானம், விமானதளம், கப்பல், பாலங்கள், பொது விடுதிகள், பள்ளிக்கூடங்கள் இன்னும் அநேகம் அநேகம் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்குமாறு நடந்து கொள்வது சிவன் சொத்தை அழித்த பெரும் பாவத்திற்கு ஆளாக்கிவிடும் என்றும், பொது சொத்தாகிய மக்கள் சொத்து கடவுளாகிய சிவனது சொத்துகள் என்றும் அதற்கு சேதாரம் செய்தால் பாவியாகிவிடுவோம் … Read more

குரு உபதேசம் 4307

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானபண்டிதன் முதல் வள்ளலார் வரையிலான ஞானத்திருக்கூட்ட மரபினர் வகுத்தும் கொடுத்தும் அளிக்கப்படுகின்ற கட்டளைகளையும், வள்ளலார் மற்றும் ஞானிகளால் வழி நடத்தப்படும் காலத்து ஞானியர் தம் கட்டளைகளையும் சிரமேற் கொண்டு எவ்வித மறுப்புமின்றி கடைப்பிடித்து உலகப்பெருமாற்றத்தை நடத்திட தொண்டு செய்கின்ற அறிவும், பரிபக்குவமும் சூழ்நிலையையும் அமையப் பெறலாம்.

குரு உபதேசம் 4306

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : வீடுபேறு என்று சொல்லப்படுகின்ற விடுதலையை ஆன்மா அடைய விரும்பினால் சிறைப்பட்ட ஆன்மாவை விடுவிக்க வேண்டும். மும்மலமாகிய சிறையினின்று ஆன்மா விடுபட வேண்டுமெனில் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறோமோ அந்த அளவிற்கு அறிவு தெளிவடையும், தெளிந்த அறிவே தன்னைப் பற்றி அறிகின்ற தகைமையை பெறுகிறது. தகைமை பெற்ற அறிவே தகைமையுடைய ஆன்மாவாக மாறுகிறது. இதை … Read more