குரு உபதேசம் – 3441
முருகா என்றால், சைவ உணவை மேற்கொள்ள செய்தும், தொடர்ந்து அன்னதானம் செய்ய வைத்தும், தன் திருவடியை தொடர்ந்து பூஜிக்க வாய்ப்பு தந்தும், வன்மனத்தை நீக்கி உயர்ந்த பண்புள்ள தாய்மை குணத்தை தந்தருள்வான் முருகப்பெருமான்.
குரு உபதேசம் – 3440
முருகா என்றால், தாயினும் மிக்க தயவுடை தயாநிதி முருகனது திருவடிகளை எந்த சோதனை வந்தாலும் விடாது இறுகப் பற்றிக் கொண்டு, இன்னுயிர் நீப்பினும் உமது பொன்னடி மறவேன் என்றே திடசித்த வைராக்கியத்துடன் அயராது பாடுபட்டால்தான் யாருக்கும், தேவர்க்கும், மூவர்க்கும் எட்டா ஞானபண்டிதனின் திருவடிகள் அன்பர் தம் விடாமுயற்சியினால், அன்பினால் கட்டுப்பட்டு தோன்றி காத்தருளும் என்பதை உணரலாம்.
குரு உபதேசம் – 3439
முருகா என்றால், பல கோடி ஜென்மங்களாக புண்ணியங்கள் செய்திருந்தாலன்றி, ஞானத்தலைவன் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜிக்க முடியாது என்பதை அறியலாம்.