குரு உபதேசம் – 3428
முருகா என்றால், மற்ற உயிரினங்களுக்கு இல்லாத வகையிலேதான், மிகச்சிறப்பான வகையிலே மனித தேகம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3427
முருகா என்றால், பலபிறவிகளில் செய்த பாவம், வறுமை, நோய், பகை, பொல்லாத காமம் ஆகிய கொடுமைகள் வந்து தாக்கும். அதை வெல்லுதற்கு உபாயம் “ஓம் அகத்தீசாய நம” என்ற மகாமந்திரத்தை குறைந்தது தினம் ஒன்றிற்கு ஆயிரத்தெட்டு முறையாவது ஜெபித்து வர வேண்டும். ஜெபித்து வரவர மெல்லமெல்ல வினைகள் குறையும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3426
பக்திக்கு தலைவன் முருகப்பெருமான்தான், அவன்தான் முதன்முதலில் பலகோடி யுகங்களுக்கு முன்னே மரணமிலாப் பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்து ஒளி உடம்பைப் பெற்ற உயர்ந்த மகான் ஆவார். முருகப்பெருமானது திருவடியைப் பற்றி பூசித்து ஆசிபெறுவதே சிறப்பறிவாகும்.