குரு உபதேசம் – 3406
உடல் வளம், மனவளம், ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய சிறப்பறிவு ஆகிய அனைத்தையும் பெறலாம்.
உடல் வளம், மனவளம், ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய சிறப்பறிவு ஆகிய அனைத்தையும் பெறலாம்.
தயவும் முருகன், தவமும் முருகன், முருகனே தயவும், முருகனே தவமும் ஆகி நின்றதை உணரலாம்.
கடவுள் நம்பிக்கையும், பாவபுண்ணியத்தில் நம்பிக்கையும் வரும். மேலும் கடவுளை அடைவதற்கு சைவ உணவும், பசியாற்றுவிப்பதும் வழித்துணை என்ற உண்மை அறிவைப் பெறலாம்.
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்று தொடர்ந்து மந்திர ஜெபம் செய்து கொண்டே இருக்க வேண்டும். மந்திரஜெபம்தனை தொடர்ந்து செய்ய செய்ய, அது முருகன் ஆசியினை பெற உபாயமாய் இருக்கும், முருகப்பெருமான்தான் செய்தற்கரிய அரும் தவங்கள் பலகோடி செய்து, காமத்தை வென்ற முதல் மாமனிதன் என்பதை முதலில் அறிய வேண்டும். ஒரு முறை முருகா! என்று சொன்னால் அகத்தீசன் முதல் நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியை ஒரு நொடியில் பெறலாம் என்பது சத்திய வாக்காகும்.