குரு உபதேசம் – 3399
தோன்றிய உயிர்கள் அனைத்தும் அழிவது இயல்பே. ஆனால் அருந்தவ முயற்சியினால் என்றும் அழியாத நிலையினை பெற்ற முதல் தலைவன், ஆற்றல் பொருந்திய முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3398
ஒருவன் செய்த நன்றியை எக்காலத்தும் மறவாதிருக்க வேண்டும் என்ற அறிவைப் பெறலாம். மேலும் பலருக்கு உதவி செய்தாலும், பயனை எதிர்பார்த்து செய்யக் கூடாது, பயன் கருதி செய்கின்ற உதவிகள் பிறவியை உண்டுபண்ணும். பயனை எதிர்பார்க்காமல் செய்கின்ற உதவிகளே பிறவியை அற்றுப் போகச் செய்யும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3397
எந்த அளவிற்கு நாமஜெபம் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு பாவங்கள் நீங்கி மனம் செம்மைப்படும் என்று அறியலாம்.