Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3310

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானிகள் ஆட்சியில் பங்கு பெறவும், ஞான ஆட்சியில் துன்பமின்றி வாழவும் விரும்புகின்றவர்கள், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து மாதம் ஒருவருக்கேனும் அன்னதானம் செய்தும், ஞானியர் திருவடி பூஜைகளை தவறாது செய்தும், தானதருமப் பணிகளுக்கு தொண்டுகள் செய்தும் வரவர, எந்தவித அச்சமும் இல்லாத வாழ்வை ஞானிகள் ஆட்சியில் வாழலாம்.

குரு உபதேசம் – 3270

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும், ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும்.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…

ஞானசித்தர்கள் ஆட்சி புண்ணியவான்களின் ஆட்சி, புனிதமான ஆட்சி, தயவு பெருகும் ஆட்சி, தர்மம் ஓங்கி நிற்கும் ஆட்சி என்பதையும் அறியலாம்.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றி

தாய்மை குணம் மிக்க முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பின்தொடரும் மக்களுக்கு லோபித்தனம் இருக்காது, செல்வநிலை பெருகும்.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…

“முருகா” என்று சொல்கின்ற ஒரு மந்திரத்திலேயே அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய நான்கும் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…

ஒரு கணப்பொழுதினில் உலகினில் திடீரென தோன்றி இந்த உலகையே தனது ஆட்சிக்கு கீழ்கொண்டு வந்து ஆட்சி செய்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.