Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4540

அகத்தீசனை வணங்கிட: நீசர்களாகிய கயவர்களால் பண்புடையோர்கள் பாதிக்கப்படுவதையும் பஞ்சபராரிகள் பாதிக்கப்படுவதையும் ஞானிகள் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4539

முருகனை வணங்கிட: சிற்றின்பத்தில்தான் பேரின்பம் உள்ளதென்பதை முற்றும் உணர்ந்து சிற்றின்பத்தினை வென்று பேரின்பத்தை அடைந்து முற்றுப்பெற்ற முதல் முனிவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து கொள்ளலாம். பேரின்ப நிலை எய்திய முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றினாலன்றி சிற்றின்பத்தின் இயல்பையோ, பேரின்பத்தின் இயல்பையோ அறிய முடியாது என்றும், சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்தை அடையும் வழிமுறையையும் அறிய முடியாது என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டு பேரின்பமளிக்கும் அதிகாரம் முருகப்பெருமான் ஒருவனுக்கே உண்டென்பதையும் அறிந்து கொள்ளலாம். அணுக அணுக அருளும் உபதேசம் அணுக அணுகவே ஆனந்தமாமே.

குரு உபதேசம் 4538

அகத்தீசனை வணங்கிட: எந்த அளவிற்கு ஞானிகள் நாமத்தை நாமஜெபம் செய்கின்றோமோ அந்த அளவிற்கு குணக்கேடுகளைப் பற்றி அறியவும் அவற்றை நீக்கிக் கொள்ளவும் வேண்டிய அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் 4537

அகத்தீசனை வணங்கிட: சிற்றின்பத்திற்கு காரணமாக இருக்கின்ற தூய்மையற்ற காமதேகத்தை தவ முயற்சியால் சுத்தி செய்தால் அந்த தேகமே சுத்தமாகி என்றும் அழியாத பேரின்பத்தை தரக்கூடிய ஒளி தேகமாக மாறும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4536

அகத்தீசனை வணங்கிட : என்றும் அழிவிலாது நிலைப்பெற்றுள்ள தமிழை கற்கவும், பரப்புவதும் தன் கடமை என எண்ணுகின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் 4535

அகத்தீசனை வணங்கிட: பிற உயிர்களுக்கு செய்கின்ற உதவிகளே தவமாக மாறும் என்று அறியலாம் (தயவே தவமாகும்).

குரு உபதேசம் 4534

அகத்தீசனை வணங்கிட : சாதாரண மனிதனையும் ஞானியாக்கும் வல்லமை மகான் அகத்தீசனுக்கே உண்டு என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4533

அகத்தீசனை வணங்கிட : உடம்பாகிய சந்திரகலையையும், உயிராகிய சூரியகலையையும், அக்கினி கலையாகிய புருவமத்தியில் சேர்க்க வேண்டுமென்றும், அதுவே சாகாக்கல்வி என்றும் அந்த சாகாக்கல்விக்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்பதையும் அகத்தீசன் ஆசியால் அறியலாம்.

குரு உபதேசம் 4532

அகத்தீசனை வணங்கிட : உலக வாழ்விற்காக கற்ற கல்வியின் துணை கொண்டே பரவாழ்வாகிய மோட்ச லாபத்தை அடைவதற்கான பரவாழ்க்கை கல்வியை கற்க வேண்டும் என்பதை அகத்தீசர் அருளால் அறிந்து கொள்ளலாம்.