தினம் ஒரு அகவல் 278
பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி – 278 பரை ஒளி என் மனப் பதியினில் விரித்தே அரசது இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி ! சக்தியின் அருள் ஒளியை எனது மனதினில் அளித்து, மனதையே அந்த ஆற்றலுக்கு ஆட்சி செய்ய வைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !


