தினம் ஒரு அகவல் 260
இப்படி கண்டனை யினியுறு படியெலாம் அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி – 260 இப்படி கண்டு எனை இனி உறுபடி எலாம் அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி ! இதுவரை ஞான அனுபவத்தில் கண்ட அனைத்தும் மற்றும் இனி நீ அடையவிருக்கும் எல்லா உயர் நிலைகளும் நீ நினைத்தபடியே நிறைவேறும் என்று உறுதியளித்த அருட்பெருஞ்ஜோதியே!


