Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 242

கருமசித் திகளின் கலைபல கோடியும் அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 242   கரும சித்திகளின் கலை பல கோடியும் அரசுற எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி !   அட்டமா சித்திகளின் எண்ணிலடங்காத, பல கோடிக்கணக்கான நுட்பங்கள் அனைத்தையும், நான் அவற்றின்மேல் ஆதிக்கம் செலுத்தி ஆளும்படியாக (அரசுற) எனக்கு வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 240

மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 240   மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் ஆவகை எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !   கர்ம, யோக, ஞான சித்திகளின் விளைவுகள் மற்றும் முடிவுகள் அனைத்தும் எனக்கு கைக்கூட அருள் செய்யும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 238

முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 238   முத்திறல் வடிவமும் உன்னி ஆங்கு எய்துறும் அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !   உலக இயக்கங்களின் அடிப்படையான ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற வல்லமைகளை அளித்ததோடு, நினைத்ததை உடனே கைக்கூட செய்யும் வல்லமையையும் அருளும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 236

நீடுக நீயே நீளுல கனைத்தும்நின் றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 236   நீடுக நீயே நீள் உலகம் அனைத்தும் நின்று ஆடுக என்ற என் அருட்பெருஞ்ஜோதி !   நீயே மரணமிலாப் பெருவாழ்வுடன் நீடூழி வாழ்வாயாக! மேலும், பரந்து விரிந்த உலகங்கள் அனைத்தையும் நீயே நிலைத்து நின்று ஆட்சி செய்வாயாக” என்று பரம்பொருளின் சகல அதிகாரத்தையும் எனக்கு வழங்கி ஆணையிட்ட அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 234

எச்சநி னக்கிலை யெல்லாம் பெறுகவென்று அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி – 234   எச்சம் நினக்கு இலை எல்லாம் பெறுக என்று அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி !   எச்சம் – குறை / முன் செய்த வினைகளின் மிச்சம் உனக்கு இனி எந்தவிதக் குறையும் (பாதிப்பும்) இல்லை; எல்லா நன்மைகளும் நிறைந்து வளரட்டும்” என்று வாழ்த்தி, என்னுடைய எல்லாவித அச்சங்களையும் நீக்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 232

மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி – 232   மாய்ந்தவர் மீட்டும் வரு நெறி தந்து இதை ஆய்ந்திடு என்றுரைத்த அருட்பெருஞ்ஜோதி !   இறந்து போனவர்களை மீண்டும் உயிர்ப்பித்து எழுந்து வரச் செய்கின்ற (மரணத்தை வெல்லும்) ரகசியமான வழியை (ஞான நெறி) எனக்கு அளித்து, “இதை நீயே ஆராய்ந்து அறிந்து கொள்” என்று உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 230

வாழிநீ டூழி வாழியென் றோங்குபே ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி – 230   வாழி நீடுழி வாழி என்று ஓங்கு பேர் ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி !   “வாழ்க! நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி உயர்ந்த நிலையில் (ஓங்கு) வீற்றிருந்தவரும், அளவற்ற, முடிவில்லாத கடல் போன்ற அருளை (பேராழியை)  வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 228

சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி – 228   சார் உயிர்க்கெல்லாம் தாரகமாம் பரை ஆருயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி !   சார்ந்த உயிர்களையெல்லாம் தாங்கி (தாரகம்) ஆதாரமாக விளங்குகின்ற பராசக்தியாகவும், அனைத்து உயிர்களின் உயிராகவும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி !