தினம் ஒரு அகவல் 226
எண்டர முடியா திலங்கிய பற்பல அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி – 226 எண் தர முடியாது இலங்கிய பற்பல அண்டமும் நிறைந்துஒளிர் அருட்பெருஞ்ஜோதி ! பிரபஞ்சத்தில் உள்ள எண்ணிலடங்கா அண்டங்கள் அனைத்திலும் ஒளிமயமாக விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி !


