admin
தினம் ஒரு அகவல் 292
பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – 292 பற்றுகள் அனைத்தையும் பற்று அறத் தவிர்த்து எனது அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ! உலக வாழ்க்கையின் பற்றுகள் அனைத்தையும் தவிர்த்து, எனது மரணத்தையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !
தினம் ஒரு அகவல் 290
மாண்டுழ லாவகை வந்திளங் காலையே ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி – 290 மாண்டு உழலா வகை வந்து இளங்காலையே ஆண்டு கொண்டு அருளிய அருட்பெருஞ்ஜோதி ! பிறப்பு இறப்பு எனும் சுழற்சியில் இருந்து இளமையிலேயே என்னை காப்பாற்றி ஆட்கொண்ட அருட்பெருஞ்ஜோதி !
தினம் ஒரு அகவல் 288
எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 288 எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி ! தோன்றி அழியக்கூடிய உலகப் பொருட்கள் மற்றும் பற்றுகள் போன்ற எதைப்பற்றியும் அச்சம் கொள்ளாதே என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி!
தினம் ஒரு அகவல் 286
பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம் மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி – 286 பிறிவு ஏது இனி உனைப் பிடித்தனம் உனக்கு நம் அறிவே வடிவு எனும் அருட்பெருஞ்ஜோதி ! இனி உனக்கு நம்மிடமிருந்து எந்தப் பிரிவும் இல்லை, உன்னை நாம் முழுமையாக பற்றிக் கொண்டோம். உனக்கு இனிமேல் நம்முடைய ஞானமே (ஒளி அறிவு) வடிவமாக அமையும் என்று உறுதியளித்து அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 284
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென் றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி – 284 சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று ஆரியர் புகழ் தரும் அருட்பெருஞ்ஜோதி ! ஆரியர் – மதிப்புமிக்கவர் / ஞானிகள் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் ஒளிகள் அனைத்திற்கும் மூலமான பேரொளியாக (ஜோதியுள் ஜோதி) விளங்குகின்றவன் என்று ஞானிகளாலும் புகழப்பட்ட அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 282
ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம் ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 282 ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம் ஆரமுது எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி ! ஆரியல் – மேலான தன்மை அகம் – ஆன்ம ஞானம், புறம் – உடல், அகப்புறம் – காரண உடல், புறப்புறம் – அண்டம் உன்னதமான நிலையில் வீற்றிருந்து, என்னுடைய உள்ளம், உடல், உள்-உணர்வு, அண்டம் ஆகிய எல்லா நிலைகளிலும் அரிய அமிர்தமாக (அழிவில்லாத இன்பமாக) … Read more
தினம் ஒரு அகவல் 280
வல்லப சத்திகள் வகையெலா மளித்தென தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – 280 வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ! ஆற்றல் மிகுந்த பிரபஞ்ச சக்திகள் அனைத்தையும் அளித்து, எனக்கு ஏற்படும் எல்லாவிதமான துன்பங்களையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !


