குரு உபதேசம் 4484
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமானை வணங்க வணங்க, வணங்குவோரிடம் உள்ள லோபித்தனம் மறையும். அன்னதானம் செய்வார்கள், ஜீவதயவை பெறுவார்கள், ஜீவதயவின் தலைவன் முருகனின் அருள்பார்வைக்கு ஆளாகுவார்கள். அதனால் செல்வம் மேலும் பெருகும், நீடிய ஆயுளும், மனவளமும், அருள்வளமும் பெருகும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் பெறுவார்கள். ……………… பிறப்பை அறுக்கும் பெருந்தகையாம் முருகனை சிறப்புடன் பூசிக்க சித்தியும் உண்டாம். உண்டாம் சித்தி ஓதி உணர்ந்திட கண்டவர் கண்ட கருத்து இதுவாகும்.


