admin
குரு உபதேசம் 4466
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமானே தலைமை தாங்கி உலகப்பெருமாற்றத்தை நடத்த இருப்பதால் கலப்படம், லஞ்ச லாவண்யம், தீவிரவாதம் ஆகிய அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் என்று அறியலாம்.
குரு உபதேசம் 4465
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காட்டிற்கு காரணமான மனித தேகத்தை சார்ந்து பிறவிக்கு காரணமான காமதேகத்தை நீர்த்து ஒளி உடம்பாக ஆக்குகிற சக்தியனைத்தும் முருகப்பெருமானுக்கே உண்டு என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4464
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றிபூசித்து ஆசிபெற்றிட்டால்…. புண்ணியபலம், அருள்பலம் என்ற சொல்லிற்கே மூலகாரணமாக இருப்பவனே முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4463
முருகப்பெருமான் திருவடிகளைபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிறப்பையும், இறப்பையும் மாற்றி இனி பிறவா நிலையை அடையலாம், மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம்.
குரு உபதேசம் 4462
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கை கடவுளால் மனிதனுள் வைக்கப்பட்ட அற்புத சக்தியை தட்டி எழுப்ப புண்ணியமும் அருளாசியும் வேண்டும். முருகப்பெருமானை வணங்க வணங்க முருகனது அருள் கூடி நிற்பதோடு புண்ணிய பலத்தின் உதவியால் அந்த சக்தி தட்டி எழுப்பப்படும். அதுவே எல்லாவற்றையும் தரும் என்பதையும் அறியலாம். கோடானு கோடி யுகங்கள் தவம் செய்து தாம் பெற்றிட்ட அற்புத சக்தியின் வெளிப்பாட்டின் மகிமையை தாம் அடைந்த அந்த பேரின்பத்தை மற்றவர்க்கும் அற்புதமாய் பெருந்தாய் பெருங்கருணையோடு வழங்கி அனைவரையும் … Read more
குரு உபதேசம் 4461
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கடவுள் முருகன்தான் என்பதை அறியும் உண்மை அறிவைப் பெறலாம். உண்மைக் கடவுளான முருகனைமனமுருகி பூஜிக்கும் வாய்ப்பை பெறலாம், சைவத்தை கடைப்பிடிக்க தக்க சூழ்நிலையும், மன உறுதியும் பெறலாம். சைவத்தை தடையின்றி கடைப்பிடிக்கலாம். அன்னதானம் செய்வதற்குரிய வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெற்று புண்ணியவானாகலாம். புண்ணியத்தைப் பெருக்கி பெருக்கி, மரணமிலாப் பெருவாழ்வை அடைகின்ற மார்க்கத்தையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
குரு உபதேசம் 4460
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகப்பெருமானே கடவுள் என்றும், அவனது ஆசியை பெற்றிட்டால், மரணத்தை வென்ற மகான்களான நவகோடி சித்தரிஷி கணங்கள் ஆசியையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4459
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தக்க ஆசானின் துணையைப் பெறுவார்கள், ஆன்மீகத்தில் முன்னேறி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.


