admin
குரு உபதேசம் 4549
முருகனை வணங்கிட: சுத்தம், அசுத்தத்தை அறிந்து அசுத்தத்தை நீக்கி சுத்தி செய்து, சுத்த தேகத்தைப் பெற்று சதகோடி சூரிய பிரகாசமுள்ள ஒளி தேகமாக மாற்றிக் கொண்டவன் முருகனே என்றும், அவனே அருட்பெருஞ்ஜோதி வடிவினாகி நின்றனன் என்பதையும், அறிவதோடு உடல் மாசு நீங்கினாலன்றி உயிர் மாசு நீங்காது என்றும், உடல் மாசு நீங்கினால் உயிர்மாசும் நீங்கி, அறிவு தெளிவாகி செம்பொருள் அறிவாகி என்றும் அழியாத பேரின்ப நிலையான மரணமிலாப் பெருவாழ்வையும் முற்றுப்பெற்ற உண்மை ஞானத்தையும் அதுவே தரும் என்பதையும் … Read more
குரு உபதேசம் 4548
அகத்தீசனை வணங்கிட: பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றவர்கள்தான் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அவ்வுயிர்களுக்கு உதவி செய்து அவ்வுயிர்படும் துன்பத்தை நீக்குகின்ற வல்லமையையும் பெற்றது என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4547
முருகனை வணங்கிட: மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும் மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம். மகத்துவம் பொருந்திய மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம். முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும். தாய்மை குணம் தந்த முருகனை வாய்மையாய்ப் போற்றி வழிபடுதல் நலமே. கற்றதன் பயனே கழல் பணிதல் என்றே உற்றநல் அறிவென்றே உண்மை உணர்வோம்.
குரு உபதேசம் 4546
அகத்தீசனை வணங்கிட: நாம் பல ஜென்மங்களிலே மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்கள் இந்த ஜென்மத்திலே நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு தடையாய் உள்ளது என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4545
முருகனை வணங்கிட: என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம். …………….. பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே இகல்எல்லாம் விலகியே இன்பம் உண்டாம்.
குரு உபதேசம் 4544
அகத்தீசனை வணங்கிட: நாம் கற்ற கல்வியும், நாம் பெற்ற செல்வம் அனைத்தும் அநித்தியமானது என்றும், ஆசான் திருவடி மட்டுமே நித்தியமானது என்றும் அறியலாம்.
குரு உபதேசம் 4543
முருகனை வணங்கிட: சதானந்த நிலை நின்று அருட்பெருஞ்ஜோதி வடிவினனாகி எண்ணிலா கோடி பரந்து விரிந்து அருள் பிரகாசமாய் சொல்லொண்ணா பேரானந்த நிலை நின்று அருளும் முருகப்பெருமான் அமைதியுடன் பேரானந்த நிலை நின்று அருள் புரிகின்றனன். பேரானந்த நிலை நிற்கும் முருகனை அழைத்தாலன்றி நம்மீது அவன்தன் அருட்கண் பார்வை திரும்பாது. இவ்வுலகினிலே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு ஜீவதயவின் வழியில் தூய நெறி வழி நடந்து, எவ்வுயிருக்கும் தீங்கு நினையாது உள்ள மென்மையான … Read more


