Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4387

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சாதுசங்க தொடர்பு என்பது பக்திநெறியினில் அமையலாம், யோகநெறியில் அமையலாம் அல்லது ஏதோ வீண் ஆரவார பூஜைகளையும், ஆடம்பர பூஜைகளையும் கொண்ட சங்க தொடர்பும் அமையலாம். ஆனால் முருகனை வணங்க வணங்கத்தான், உண்மையான பக்தியுடைய, உண்மையான யோகம் அறிந்த, உண்மையான தவம் செய்திட்ட, உண்மையான ஞானம் அறிந்த, உண்மையான முக்தியை அறிந்த, உண்மையான சித்தியை அறிந்த சாதுசங்க தொடர்பை பெறுவார்கள். பக்தி, யோகம், ஞானம், முக்தி, சித்தியென ஞானத்தின் அத்துணைப் படிகட்டுகளையும் … Read more

குரு உபதேசம் 4386

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பிறவா பெருநிலையை, மரணமிலாப் பெருவாழ்வை அடைகின்றதான ஞானம்தனை பெறுதல் முருகனருளால் மட்டுமே இயலும். அப்படிப்பட்ட ஞானம் என்ற சொல்லே ஜீவதயவினை அடிப்படையாகக் கொண்டதுதான். ஜீவதயவை பெற வேண்டுமாயின் ஜீவதயவே வடிவான முருகனது அருளைப் பெற்றாலன்றி நம்முள் ஜீவதயவு தோன்றாது. முருகன் அருளை பெறபெற ஜீவதயவும் நம்முள் தோன்றி பெருகும். முருகனது அருள் கூடிட கூடிட ஜீவதயவு மேல்மேலும் பெருகி ஜீவதயவே வடிவான முருகப்பெருமானின் அன்பிற்கு பாத்திரமாகி நாமும் ஜீவதயவுடையோராய் … Read more

குரு உபதேசம் 4385

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனித வர்க்கத்தில் அவரவர் செய்திட்ட புண்ணியத்திற்கு ஏற்ப வேண்டுதலுக்கு ஏற்ப அருள் செய்வான் முதற்கடவுளாம் முருகப்பெருமான். எல்லோரும் எல்லாவற்றையும் வேண்டலாம். ஆனால் அவரவர் பாவபுண்ணியங்களுக்கு ஏற்பதான் முருகன் அருள் செய்வான். அப்படி முன்ஜென்ம புண்ணியத்தில் இறைவன் கருணையாலே வேண்டுதலிற்கு ஏற்ப அளிக்கப்பட்ட பதவி, பட்டம், வாய்ப்புகள், பொறுப்புகள், அமைப்புகள் ஆகியவற்றை வரமாய் பெற்று வாழ்கின்றோர் தாம் வேண்டி விரும்பி பெற்ற அந்த வரத்திற்கேற்பவும் முருகனது நோக்கத்திற்கு ஏற்பவும், உலகினில் … Read more

குரு உபதேசம் 4384

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இகவாழ்வை செம்மையாக நடத்திட ஆசி பெறலாம், பரவாழ்வையும் செம்மையாக நடத்திட ஆசி பெறலாம். …………….. தேற்றமாம் முருகனின் திருவடி போற்றிட மாற்றமும் உண்டு மனமும் செம்மையே. செம்மையாம் முருகனின் திருவடியை போற்றிட இம்மைக்கும் மறுமைக்கும் இணையடி துணையே. துணையாம் இணையடி தோத்திரம் செய்திட வினையுமில்லை விவேகம் உண்டாம். உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட கண்டவர் கண்ட கருத்து இதுவாம்.

குரு உபதேசம் 4383

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முன்ஜென்மத்தினில் செய்த பாவ வினைகளால் பீடிக்கப்பட்டு எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் சொற்குரு துணையால் தூண்டப்பட்டு “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ”  என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனமுருகி ஆதி ஞானத்தலைவன் முருகனது திருவடிகளைப் பற்றி சொல்லி விடுவானேயாகில் எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பிரபஞ்ச தலைவர் முருகப்பெருமானது அருள்பார்வையினால் அவனது பாவங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனி … Read more

குரு உபதேசம் 4382

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நிலைக்கும் ஞானபண்டிதன் முருகப்பெருமானே தலைவன் என்பதையும் முருகனது ஆசி பெற்றிட்டால் இவை நான்கையும் கடந்து வெற்றி பெறலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4381

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஏழை எளிய மக்களுக்கு கருணை காட்டக்கூடிய பண்புடைய மக்களைக் கொண்டு முருகப்பெருமான் தலைமை தாங்கி இவ்வுலகை வழி நடத்தி ஆட்சி செய்வார் என்பதை அறியலாம். …………….. காக்கும் கடவுள் கந்தனைப் போற்றிட நோக்கம் அனைத்தும் நொடியில் சித்தியே.

குரு உபதேசம் 4380

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றவர்கள் புண்ணிய பலத்தை பெற்றும் முருகனது அருளை முழுமையாகப் பெற்றும் இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வை அடையலாம் என்பதை அறியலாம். முருகனது ஆசியைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டும் வருவதோடு, எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு உதவி செய்கின்றோமோ அந்த அளவிற்கு ஜீவதயவு பெருக்கம் அடையுமென்றும், எந்த அளவிற்கு உயிர்கள் மகிழ்வுறுகிறதோ அந்த அளவிற்கு அறிவு … Read more

குரு உபதேசம் 4379

முருகனது திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் ஆசியைப் பெற வேண்டுமானால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் முருகனது அருளால் வருகின்ற ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறலாம் என்பதையும் அறியலாம்.