admin
குரு உபதேசம் 4431
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் தலைமையில் நடக்கக்கூடிய ஞான ஆட்சியில் கலப்படம் இருக்காது, விலைவாசி ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு மக்கள் ஞானிகள் பாதுகாப்பிலே பாதுகாப்புடன் அமைதியான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம். …………….. அமைதியான வாழ்வு அருளும் முருகனை இமைப்பொழுதும் மறவாது ஏற்றியே தொழுவோமே. பயன்மிக்க முருகனின் பதத்தை போற்றிட நயமிக்க ஆட்சி நல்குவார் முருகனே!
குரு உபதேசம் 4430
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பாவபுண்ணியங்களில் நம்பிக்கையற்றோர், கடவுள் நம்பிக்கை இல்லாதோர், நீதிநெறிக்கு உட்படாத தான்தோன்றிதனமான வாழ்வை வாழ்வோர்களது எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக பூமியின் பாவச்சுமை ஏறுவதினாலே மிகுதி மழையும், மிகுதி வறட்சியும் ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை அறியலாம். நாட்டில் பாவிகள் குறைந்து புண்ணியவான்கள் அதிகமாக அதிகமாக இயற்கை கட்டுக்குள் இருந்து மக்களை வாழ வைக்கும் என்பதையும் அறியலாம். …………….. கார்மயில் வாகனன் கந்தனைப் போற்றிட பார்போற்ற வாழ்வார் பயனே!
குரு உபதேசம் 4429
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், முக்தி மார்க்கம், யோக மார்க்கம், மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கம் என்ற எந்த ஒரு மார்க்கத்தை கடைப்பிடித்து முக்தியடைய விரும்பினாலும் முக்திக்கு தலைவன் முருகனே என்பதையும் முருகன் அருளினால்தான் பக்தியும், யோகமும், ஞானமும், முக்தியும் மரணமிலாப் பெருவாழ்வும் கைகூடும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4428
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனே தமிழை உருவாக்கியவன், முருகனே ஞானத்தையும் உண்டாக்கியவன், முருகனே அனைத்து கலைகளுக்கும் தலைவன், தமிழே ஞான மொழி, தமிழ் கற்றால்தான் ஞானம் பெற முடியும் எனும் சிறப்பறிவை பெறலாம். தமிழ் கடவுள் முருகனே ஞானபண்டிதனாக இருப்பதையும், முருகப்பெருமான் திருவடி பற்றி மனமுருகி பூஜித்து வணங்க வணங்க உயிர்க்கொலை செய்து புலால் உண்டதால்தான் நமக்கு ஞானம் தடைபட்டதை உணர்வார்கள். புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டாலன்றி ஞானத்தில் முன்னேற … Read more
குரு உபதேசம் 4427
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இயற்கை சீற்றங்களினாலும், பல்வேறு வகையான இடையூறுகளினாலும், பாதிக்காமல் வாழவிரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து கடவுள் நம்பிக்கையோடு முருகனை வணங்க வணங்க இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்கலாம். இயற்கை கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே மிகச் சிறந்த உயிரினம் மனிதர்களே. மனிதர்களும் மற்ற ஜீவராசிகளும் இயற்கைக் கடவுளால்தான் காப்பாற்றப்படுகிறோம் என்பதை அறியவில்லை. ஆயினும் இயற்கை நம்மை தோற்றுவிக்கும், காக்கும், அழித்துவிடும். ஆனால் இயற்கையை வென்ற முதுபெரும் தலைவன், இயற்கையோடு இயற்கையாக இரண்டற … Read more
குரு உபதேசம் 4426
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்பதும், உயிர்க்கொலை செய்யக் கூடாது என்பதையும் ஜீவதயவினை தரவல்லதான அன்னதானம் செய்ய வாய்ப்பையும் பெறுவதோடு, பாவசுமையிலிருந்து மீண்டு இயற்கை சீற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்து தப்பித்தும் கொள்ளலாம், இயற்கை சீற்றம் ஏற்படாதவாறும் காக்கலாம். சைவத்தை கடைப்பிடிப்போர் மிகுதி ஆகஆக இயற்கை சீற்றம் இருக்காது, பருவமழை சீராக பெய்யும், நிலநடுக்கம் வராது, பூகம்பம் உண்டாகாது என்பதை அறிவதோடு முருகனது அருளை பெற்றால்தான் இவையனைத்தையும் அறிய … Read more
குரு உபதேசம் 4425
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சைவத் தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்தாலன்றி எது உண்மை? எது பொய்? என்று புரியாது. மக்களை வழிநடத்த உண்மை அறிவே வேண்டும். ஆதலினாலே சைவத்தலைவன் முருகப்பெருமானை வணங்கிட உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். நாட்டினை வளமுள்ளதாக மாற்றிட முதலில் அதிகாரத்தில் உள்ளோரும், பதவியில் உள்ளோரும், நாட்டை வழிநடத்தும் அதிகாரிகளும், மக்களை காக்கின்ற பணிகளிலே, வழிநடத்தும் பணிகளிலே என நாட்டில் உள்ள … Read more
குரு உபதேசம் 4424
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதர்கள் ஆட்சியில் மிகுதி மழை, மிகுதி வறட்சி, நிலநடுக்கம் போன்றவைகள் வரத்தான் செய்யும். ஞானிகள் ஆட்சியிலே மிகுதி மழை இருக்காது, இயற்கை சீற்றங்களும் இருக்காது, தேவைக்குட்பட்ட மழை பெய்து நாடெங்கும் நல்ல சூழ்நிலையில் ஞானவாழ்வை வாழ்வார்கள். கொள்ளை, கொலை, கற்பழிப்புகள் போன்றவை இருக்காது. எங்கும் எதிலும் அமைதியான வாழ்வு உண்டாகும் என்பதை அறியலாம். …………….. கடந்தான் கந்தனின் கழலிணை போற்றிட கடக்க துணை வரும் கந்தன் கழலே.


