admin
குரு உபதேசம் 4244
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இடகலையாகிய சந்திரகலையையும் வலது கலையாகிய சூரியகலையையும், புருவமத்தியாகிய சுழிமுனையில் செலுத்தினால் மும்மலக் கசடுகள் நீங்கி தெளிவான அறிவைப் பெற்று ஒளி தேகத்தை பெறலாம் என்று அறியலாம். இந்த வாய்ப்பை முருகன் அருளால்தான் பெற முடியும். வேறு மார்க்கமில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். கனிவுடைய முருகனின் கழலிணை போற்றிட துணிவு மிக உண்டாம் துணையே. துணையாம் இணையடி தோத்திரம் செய்திட வினைதான் என்செயும் வினையே.
குரு உபதேசம் 4243
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பசி நீக்கும் எண்ணம் உள்ளவருக்கு முருகப்பெருமானின் ஆசி கிடைக்கும் என்பதை அறியலாம். கிடைத்தற்கரிய முருகன் திருவடி கிடைத்திட்டால் கடைத்தேற உபாயம் காட்டுமே உண்மை. பாடுபெறும் முருகனின் பாதம் பணிந்திட வீடுபேறு காட்டுமே விரைந்தே. படித்தேன் முருகனின் பாதத்தின் பெருமையை நொடித்தே நலியா நுண்ணுணர்வு பெற்றேனே. கற்றேன் முருகனின் கழலிணை பெற்றிட பெற்றேனே பேரின்ப வாழ்வு பெருமையே.
குரு உபதேசம் 4242
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை கடைப்பிடித்திட வைராக்கியத்தை தருவதோடு தீவிர சைவத்தையும், அதன்பின் அதி தீவிர சைவ உணவை கடைப்பிடித்திடவும், அதன்பின் ஞான வாழ்வை தருகின்ற அதிதீவிர அதிவீர சைவ உணவை கடைப்பிடித்திடவும் தக்க சூழ்நிலை, வைராக்கியம், திடசித்தம் ஆகியவற்றை அருளி அதி தீவிர அதிவீர சைவனாக ஞானத்துறை வழி வருகின்ற ஞானியாக நம்மை மாற்றிட அருள் செய்வதோடு ஞானியாகும் வாய்ப்பினை அருளி அதற்குரிய பரிபக்குவம், சூழ்நிலை, உணவு முறை, … Read more
குரு உபதேசம் 4241
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : உடல் மாசு நீங்கும், உயிர் மாசும் நீங்கும், மனமாசும் நீங்கும், முருகனருளால் உடல் மாசு, உயிர் மாசு, மனமாசு ஆகிய அனைத்தும் நீங்கி தூய்மையான ஒளிஉடம்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்று அறியலாம். மாசற்ற முருகனின் மலரடி போற்றிட ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம். வேலவன் திருவடியை வேண்டியே போற்றிட காலனை வெல்ல கருத்து தோன்றுமே! குணவான் முருகனை கூவி அழைத்திட வனவாசம் ஏகா வாழ்வு … Read more
குரு உபதேசம் 4240
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்ளவும், பிற உயிர்கள்பால் கருணை கொண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான அறிவையும் பெறலாம். பாலன் முருகனின் பாதம் பணிந்திட ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே. கடந்தான் கந்தனின் கழலினை போற்றிட கடக்க உதவுமே கந்தன் இணையடி. ஆசான் ஆசியும் அடியவர்கள் ஆசியும் நேசத்தே பெற்றிட நிலைபல காணுமே.
குரு உபதேசம் 4239
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : செய்யக் கூடிய செயல்களிலே எது பாவம், எது புண்ணியம் என்று அறிகின்ற சிறப்பறிவைப் பெறலாம். இருவினைகள் கடந்தே இன்பம் பெறலாம் குருவருள் கூடிட கூடுமே நலம்.
குரு உபதேசம் 4238
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கொடுக்கக் கூடிய மனமும் முருகனே, அதற்கு தேவையான பொருளும் அவனே. கிடைக்கும் புண்ணியமும் அவனே, அதனால் வருகின்ற ஜென்மத்தைக் கடைத்தேற்றும் உபாயமும் அவனே என அனைத்தும் அவனே ஆகி நின்று, தர்மத்தின் தலைவனாக விளங்கி நம்மை காப்பவன் முருகனே என்பதையும் அறியலாம். இருகலையும் பொருந்திட இடரேதும் இல்லை குருவருள் பெற்றிட கூடுமே நலம். குகார்ப்பணம் என்று கூவியே கொடுங்கள் பகவான் அருள் தானே வரும்.
குரு உபதேசம் 4237
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அகத்தியம் பெருமானாருக்கு அருள் செய்து ஒளி தேகத்தை அளித்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து அருள் செய்து காத்ததைப் போல நாம் முருகனை வணங்க வணங்க, முருகனும் நம்மீது கருணை கொண்டு ஒரு கால பரியந்தத்திலே நமக்கும் அருள் செய்து நம்மையும் அருள் பார்வைக்கு உள்ளாக்கி அகத்தியருக்கு அருளியது போல நம்மையும் சார்ந்து வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்வான் என்பதை அறியலாம். அதற்கு நாம் முருகப்பெருமானாரது ஆசியையும், அருளையும் அளவிலாது … Read more