Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4396

முருகப்பெருமான் ஆசி பெற்றிட்டால்…. ஆறறிவு உள்ள மனிதர்கள் முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்று முருகப்பெருமானை பூஜிக்கின்றவர்களுக்கு ஏதேனும் இடையூறு வந்திட்டால் அக்கணமே தோன்றி இடையூறு நீக்கி அருள் செய்வான் என்று அறியலாம். …………….. வல்லவன் வேலவன் வருகையால் உலகினிலே எல்லோரும் வாழ்வார் இனிதே! மூவர்க்கும் தேவர்க்கும் முதல்வன் முருகனே யாவரும் நலம் தரவே வருவான் திண்ணமே!

குரு உபதேசம் 4395

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இகவாழ்வும் சித்திக்கும், பரவாழ்வும் சித்திக்கும், அதுமட்டுமன்றி இகவாழ்விற்கும் பரவாழ்விற்கும் அப்பாற்பட்டதான ஐந்தொழில் புரியும் வல்லமை பெற்றதான, தோன்றி மறையக்கூடிய வல்லமை பெற்ற ஒளிதேகத்தை உடையதுமான பிரம்மநிலை வாழ்வையும் பெறலாம். …………….. வற்றா கருணை வழங்கும் முருகனை சற்றேனும் பூசிக்க தானவனாமே!

குரு உபதேசம் 4394

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. வினைக்குரிய காரணத்தை அறியச் செய்தும், வினைக்குரிய காரணத்தை உணரச்செய்தும் மீண்டும் வினை சூழாதிருக்க தேவையான வாய்ப்பையும், வினையை அனுபவிக்க செய்தும், வினையிலிருந்து மீட்கவும் செய்கிறான் முருகப்பெருமான். …………….. வினைகள் அனைத்தும் கடந்த வேலவன் திருவடியை துணையென்றே போற்றுவோம் துணிந்தே.

குரு உபதேசம் 4393

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு நொடிப் பொழுதில் அநேகம் அநேகம் கோடி சக்திகளை முருகனின் நாமங்களை அவனது திருவடி பற்றி மனமுருகி சொல்லி சொல்லி முருகனது அருளைப் பெற்றிட்டால் பெறலாம் என்பதை அறியலாம். …………….. எந்தை நந்தனார் இணையடி போற்றிட சிந்தையும் தெளிய சிவகதி உண்டாம். புண்ணிய நந்தனார் பொற்பதம் போற்றிட எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே. திட்டமாம் நந்தனார் திருவடி போற்றிட அட்டமா சித்தும் அருளுவன் நந்தனே. நாட்டமாம் நந்தனை நாளும் … Read more

குரு உபதேசம் 4392

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்தால்…. “முருகா” என்று சொல்கின்ற ஒரு மந்திரத்திலேயே அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய நான்கும் உள்ளதை அறிந்து கொள்ளலாம். …………….. வேதாந்த வித்தகன் விமலனாம் முருகனின் பாதார விந்தம் பணிதலே பண்பாகும்.

குரு உபதேசம் 4391

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளை பூஜிக்க பூஜிக்க வினைகள் குறையும், மேலும் பூஜிக்க பூஜிக்க செல்வம் பெருகும், மேலும் பூஜிக்க பூஜிக்க தயை சிந்தை உண்டாகும், மேலும் மேலும் பூஜிக்க பூஜிக்க ஞானத்திற்குரிய அறிவு உண்டாகும், மேலும் பூஜிக்க பூஜிக்க தயவு பெருகி அவனே தயவுடையோராய் மாறி நின்று ஞானத்தை அடைகின்ற வாய்ப்பையும் பெறுவார்கள். …………….. வினைவென்ற வேலன் திருவடி விரும்பியே பூசிக்க துணையென்றே போற்றுவார் துறவோர்.