Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4216

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பொறாமை குணமும், பேராசையும், அளவு கடந்த கோபமும், பிறர் மனம் புண்படும்படி பேசுதலும் ஆகிய குணக்கேடுகளெல்லாம் பல ஜென்மங்களிலே செய்திட்ட பாவங்களினாலேதான் உண்டானது என்பதை அறியலாம். மாபெரும் தன்னிகரற்ற புண்ணியவானாகிய முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி பூஜித்தால் பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் நீங்கும், பிறர் மனம் புண்படும்படி பேசுகின்ற குணக்கேடு நீங்கிவிடும் என்பதை அறியலாம். இருவிழிக்கு நடுவில் இயங்கும் குகனே கருவழி கடக்க காட்டுவான் உண்மை. உண்மையாம் … Read more

குரு உபதேசம் 4215

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : உயிர்களுக்கு நன்மை செய்கின்ற அறிவையும் வாய்ப்பையும் பெறுவதோடு உயிர்கள் மகிழ்வினிலே ஆசியையும் பெற்றிட வழிவகைகளையும் பெற்று உயிர்களிடத்து ஆசியையும் பெறலாம். கருணையே வடிவான கந்தனை போற்றிட தருணத்தே வந்து தானருள்வானே. கருணையே வடிவான கந்தனை போற்றிட அருணனைப் போல அருள்வான் உண்மையே. குணவான் முருகனை கூவி அழைத்திட மனமாயை இல்லை மனமும் செம்மையே. அருளாளன் முருகன் அருளைப் போற்றவே இருளெல்லாம் விலகி இன்பம் உண்டாம்.

குரு உபதேசம் 4214

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அகத்தீசன் முதல் அனைத்து சித்தர்களுக்கும் ஆசான் முருகப்பெருமான்தான் தலைவன் என்று அறிகின்ற அறிவைப் பெறலாம். பக்குவம் மிக்க பால முருகனே தக்கத் துணையென்றே சாற்றுதல் நலமே. பாலன் முருகனின் பாதம் பணிந்திட காலபயம் கழன்று போமே. இடைபின் கலைநடுவில் இயங்கும் முருகனை தடையறக் கண்டிட தான் அவனாமே. பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட உற்ற தவமாம் ஓதி உயர்வோம்.

குரு உபதேசம் 4213

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இகவாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞானத்திற்கும் ஆதி ஞானத்தலைவன், ஞானபண்டிதன் முருகப்பெருமானைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதை அறியலாம். அறக்கடவுளாம் ஆறுமுகப் பெருமானை மறவாமல் பூசிக்க மனமும் செம்மையே. அகிலத் தலைவன் ஆறுமுகப் பெருமானை மகிழப் பூசித்தால் மனமும் செம்மையே.

குரு உபதேசம் 4212

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : சைவ உணவை கடைப்பிடித்து அன்னதானம் செய்து, ஞானிகளை பூஜித்து ஆசிபெற்று நாள்நாளும் பெருகுகின்ற வளர்பிறை போன்ற சிறப்பு அறிவை பெறலாம்.

குரு உபதேசம் 4211

முருகனை பூஜித்து ஆசி பெற்றிட : சைவ உணவை கடைப்பிடிக்கவும் ஞானிகள் திருவடியை பூசித்து ஆசி பெறவும் முருகப்பெருமானின் ஆசி இருந்தால்தான் முடியும் என்பதை அறியலாம். ஆற்றலாம் நக்கீரன் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். நக்கீரன் திருவடியை நாளும் போற்றவே துக்கமும் இல்லை துயரமும் இல்லையே. இல்லையே நக்கீரன் இணையடி போற்றிட தொல்லையும் இல்லை துயரமும் இல்லையே.

குரு உபதேசம் 4210

முருகப்பெருமானின் ஆசியை பெற்றிட : உழைப்பிற்கு தகுந்த ஊதியம் பெறாமல் அதிகமாக பொருளை பெறுதல் பாவம் என்பதை அறியலாம். ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றலே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

குரு உபதேசம் 4209

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மூச்சுக்காற்றின் இயக்கமும் அதை லயப்படுத்துகின்ற அறிவையும் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்று அறியலாம். முருகன் அருளால் மூச்சுக்காற்று லயப்பட்டால் கடுகை மலையாக்கலாம், மலையை கடுகாக்கலாம். ஆணையும் பெண்ணாக்கலாம் பெண்ணையும் ஆணாக்கலாம். அதுமட்டுமன்று ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்யலாம். ஐந்தொழில் செய்யும் வல்லமையை முருகப்பெருமானின் அருளாசியினாலன்றி வேறு எதனாலும் பெற முடியாது என்று அறியலாம். குணவான் முருகனை கூவி அழைத்திட மனமும் செம்மையே மாள்வதும் … Read more