Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 64

64. ஓதியோ தாம லுறவெனக் களித்த ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி   ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த ஆதி ஈறு இல்லா அருட்பெருஞ்ஜோதி !   ஆதி – தொடக்கம்      ஈறு – முடிவு எந்தவொரு உபதேசமும் இல்லாமலும், நான் எந்தவொரு நூலையும் படிக்காமலும், நேரடியாக தன்னையே உறவாகவும் (ஞானமாகவும்) எனக்கு அளித்து, தொடக்கம் மற்றும் முடிவுகள் எதுவும் இல்லாத நிலையில் என்றும் நிலைத்திருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 63

63. என்னையும் பணிகொண் டிறவா வரமளித் தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி   என்னையும் பணிகொண்டு இறவா வரம் அளித்து அன்னையின் உவந்த அருட்பெருஞ்ஜோதி ! என்னையும் தன் அடிமையாக ஏற்றுக்கொண்டு, எனக்கு மரணமே இல்லாத பெருவாழ்வு என்னும் வரத்தை அளித்து, நான் அந்த இன்ப நிலையை அடைவதைக் கண்டு அன்னையின் அன்பை விடவும் அதிகமாக மகிழ்ச்சி அடைகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 62

62. உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின் அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி   உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி !   உளவு – சூட்சுமம் / இரகசியம் இறைவனை உள்ளத்தில் உணரும் சூட்சும வழியால் மட்டுமே அறிய முடியுமே தவிர, உலகில் உள்ள எந்த அளவுகோல்களைக் கொண்டு அளக்க முயன்றாலும், அவன் அளந்து அறிய முடியாத எல்லையற்ற பொருளாகவே விளங்குவான். அத்தகைய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 61

61. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி   பொது உணர்வு உணரும் போது அல்லால் பிரித்தே அது எனின் தோன்றா அருட்பெருஞ்ஜோதி !   பொதுவான உணர்வான “எல்லா உயிரும் ஒன்றே” என்று உணராமல், இறைவன் வேறு, உயிர்கள் வேறு என்று பிரித்துப் பார்க்க முயல்பவர்களுக்கு இறை அனுபவத்தை கொடுக்காமல் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியே !

தினம் ஒரு அகவல் 60

60. உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி   உனும் உணர்வு உணர்வாய் உணர்வெலாம் கடந்த அநுபவா தீத அருட்பெருஞ்ஜோதி  !   உனும் உணர்வு – உள்ளறிவு உள்ளறிவுக்குள் (உனுமுணர்வு) உணர்வாக இருந்து, உலகியல் மற்றும் ஆன்மீக அறிவுகள் அனைத்தையும் தாண்டி, நேரடியாக உணரும் அனுபவத்தின் எல்லைகளுக்கும்கூட அப்பாற்பட்டவராய் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 59

59. தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர் அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி   தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அநுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !   தனு – உடம்பு,  கரணாதிகள் – அந்தக்கரணங்கள் ( மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) உடல், மனம் போன்ற கருவிகள் அனைத்தையும் கடந்துச் சென்று நேரடியாக அனுபவ அறிவாகவே  ஆகி விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 58

58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி   சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி !   சாதி, மதம், சமயம் ஆகிய எந்தவிதமான எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவராக இருக்கின்றவரும், ஆதியில் தோன்றி அனாதியாக (முடிவில்லாமல்) என்றும் நிலைத்திருப்பவருமான அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 57

57. பிறிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென் னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி   பிறிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என் அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி !   எந்தக் காலத்திலும் பிரிந்து போவதையோ அல்லது விலகி இருப்பதையோ அறியாத மகத்தான பரம்பொருளாக விளங்குகின்றவரும், எனது அறிவினுள் இருந்து சுத்த அறிவைச் செலுத்துகின்ற அறிவாகவே இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 56

56. எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி   எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது அம்மை அப்பனுமாம் அருட்பெருஞ்ஜோதி !   என்னையும், என்னை விட்டு இறை சிந்தனை சிறிதும் பிரியாமல் காப்பாற்றும் எனது தாய் தந்தை போன்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !