Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 48

48. எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி   எம்பலம் எனத் தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி அம்பலத்து ஆடல் செய் அருட்பெருஞ்ஜோதி !   “அருட்பெருஞ்ஜோதியே” “என் ஒரே அடைக்கலம்” என்று மனதாரத் தொழுது, போற்றிப் பாடும் அடியவர்களுக்கு உடனே அருள் செய்கின்றவரும், எல்லோரும் காணும்படி அம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடுகின்றவருமான அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 47

47. பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி ஆணிப்பொ ன்னம்பலத் தருட்பெருஞ் ஜோதி   பாணிப்பு இலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி ஆணிப் பொன்னம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   பாணிப்பு – தாமதம் தன்னை வணங்குவோருக்கு தாமதம் இல்லாமல் அருளாசி வழங்கக் கூடியவராக உயர்ந்த செம்பொன்னால் ஆன பொது அம்பலத்தில் (சிற்சபையில்) வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 46

46. எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய அனைத்தும் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி !   எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்ட ஒரு மேலான இயல்பான வாழ்வை வழங்கி, வேண்டிய அனைத்தையும் அருளும் சக்தி படைத்த திருச்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 45

45. கற்பம் பலபல கழியினு மழிவுறா அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   கற்பம் பலபல கழியினும் அழிவுறா அற்புதம் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி !   கற்பம் – யுகம் பல யுகங்கள் கடந்து, அவை முடிந்து போனாலும் கூட, எந்தக் காலத்திலும் அழிவுறாமல் இருக்கின்றவரும், தன்னுடைய அடியார்களுக்கு அற்புதங்களை அருளாசியாக அள்ளி வழங்குகின்ற சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 44

44. இழியாப் பெருநல மெல்லா மளித்தருள் அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   இழியாப் பெரு நலமெல்லாம் அளித்து அருள் அழியாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   ஒருபோதும் குறைந்து போகாத அல்லது அழியாத உயர்ந்த பேரின்ப நலன்கள் அனைத்தையும் அள்ளி வழங்கி அருள் பாலிக்கின்றவரும், காலத்தால் அழியாத ஞானமயமான சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 43

43. வாரமு மழியா வரமுந் தருந்திரு வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   வாரமும் அழியா வரமும் தரும் திரு ஆரமுதாம் சபை அருட்பெருஞ்ஜோதி !   வாரம் என்பது பக்தி / பக்தர் என்று பொருள்படும். தன்மீது பக்தி கொண்டு நாடி வருகின்ற பக்தர்களுக்கு, காலத்தால் அழியாத மரணமிலாப் பெருவாழ்வு என்னும் வரத்தை அளிக்கும் திருவருள் நிறைந்தவரும், அடியவர்களுக்கு அமுதமாக விளங்கும் சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 42

42. ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம் ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி   ஓதி நின்று உணர்ந்து உணர்ந்து உணர்தற்கு அரிதாம் ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !   ஞான அறிவுரை நூல்களை தொடர்ந்து படித்து அறிந்தாலும்,  மீண்டும் மீண்டும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தாலும், அதையும் தாண்டி முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு அரிதானதாக விளங்கும் எல்லையற்ற தன்மையுடைய அந்த ஆதி சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 41

41. மனாதிகட் கரிய மதாதீத வெளியாம் அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி   மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம் அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !   மனம், புத்தி, சித்தம், அகங்காரம் போன்ற எந்த அறிவுக் கருவிகளுக்கும் எட்டாததும், அனைத்து மதக் கொள்கைகளையும் தாண்டி நிற்கும் நிலையான நித்திய வெளியில், காலத்தால் அழியாத ஞான ஒளியாக வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 40

40. சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம் ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   சேகரமாம் பல சித்தி நிலைக்கெலாம் ஆகரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி !   திரண்டுள்ள பலவிதமான சித்தி நிலைகள் மற்றும் அரிய சக்திகள் ஆகிய அனைத்திற்கும் மூல இருப்பிடமாக, ஊற்றுக் கண்ணாக விளங்கும் சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 39

39. உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி   உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !   உலகில் காணப்படும் இரண்டு எதிரெதிர் நிலைகளாகத் தோன்றுபவை அனைத்தும் உண்மையில் ஒன்றே என்று உணர்த்திய, எல்லா உயிர்களுக்கும் அச்சம் நீக்கி அடைக்கலம் கொடுக்கும் ஞானசபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!