admin
குரு உபதேசம் – 3751
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இதுநாள் வரையிலும் இயற்கை சீற்றங்கள் உண்டாகியது. மக்களோ லஞ்சலாவண்யங்களாலும் கலப்படத்தாலும் சமுதாயமே பாழ்பட்டு போனது. இனிவரும் ஞானசித்தர் காலத்திலே லஞ்சலாவண்யமற்ற கலப்படமற்ற ஆட்சி அமைவதோடு இயற்கை சீற்றங்களும் கட்டுப்பட்டு நாடு செழிப்பாக இருக்கும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3741
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானே ஞானஆட்சியை தலைமையேற்று நடத்துகின்றபடியினாலே முருகனது ஆட்சியில், இனத்தால், மொழியால், மதத்தின் பெயரால் ஆள்படையின் பலத்தினால் ஒருவர் மற்றொருவரை தாக்குதல் நடத்திடக் கூடாது என்றும், ஒருவன் மற்றொருவருக்கு இடையூறு தர அனுமதிக்க மாட்டான் முருகன் என்பதை அறியலாம்.


