Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4142

முருகனை வணங்கிட : பெறுதற்கரிய மானுட பிறவியைப் பெற்றவர்கள், இந்த உடம்பின் துணை கொண்டே பரவாழ்வை அடைய செய்கின்ற முயற்சிகளும், செயல்பாடுகளுமே சாகாக்கல்வி என்பதையும் அறியலாம். சாகாக்கல்வி கற்பிப்பது அன்று, கற்பதும் அன்று. அது முருகப்பெருமானின் அருளால் அவரவருள்ளும் எழுகின்ற ஞானக்கல்வியாகும். அப்படிப்பட்ட ஞானக்கல்வியை கற்று ஞானம்அடைய விரும்புகின்றவர்கள் முதலில் உயிர்க்கொலை தவிர்க்க வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினம்தினம் தவறாமல் காலை பத்து நிமிடமும் மாலை  பத்து நிமிடமும் … Read more

குரு உபதேசம் – 4141

முருகா என்றால்: காமம் அற்று போகும். பொறாமை நம்மை விட்டு விலகும். கோபம் நீங்கிவிடும். பேராசை அறவே இருக்காது பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படாமல் பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பாங்கு வரும். லோபித்தனம் நீங்கி தயைசிந்தை உண்டாகும். தாய்மை குணமுடைய முருகப்பெருமானது திருவடிகளைப் பற்றி பூசித்தால் நம்மிடம் உள்ள தீயன ஒழிந்து நன்மைகள் அனைத்தையும் பெறுவதோடு மேற்கண்ட குணப்பண்புகளை முழுமையாகப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் – 4140

முருகா என்றால்: பல பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம் அவரவர் செய்திட்ட பாவத்தின் பயனை ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து பாவவினை நீக்கி காத்து, இரட்சித்து, வீடுபேற்றினை அருள்வான் முருகன் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4139

முருகா என்றால்: உலக நன்மைக்காகவே அவதாரம் செய்தவன்தான் முருகப்பெருமான் என்றும் அவன் திருவடியை பற்றி பூசித்து ஆசிபெறுவதே அறிவு என்றும் அதுவே சாகாக் கல்வி என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 4138

முருகா என்றால்: பொருள் மீது பற்றறச் செய்தும், பொது சேவையில் ஆர்வத்தை உண்டு பண்ணியும், தன் திருவடியை தொடர்ந்து பற்றச் செய்தும், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய ஆர்வத்தை உண்டு பண்ணியும் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்வான் முருகப்பெருமான்.

குரு உபதேசம் – 4137

முருகா என்றால்: வீடு கட்டுதல், சுப செயல்கள் செய்தல், ஆக்க பணிகள் செய்தல் என்ற அனைத்திற்கும் கடன் வாங்கி செய்யாமல் இருக்கின்ற சூழ்நிலைக்கேற்ப வாழ்கின்ற மனவலிமை பெற்று நலமுடன் வாழ்வார்கள்.

குரு உபதேசம் – 4136

முருகா என்றால்: சைவ உணவை மேற்கொள்ள செய்தும், தொடர்ந்து அன்னதானம் செய்ய வைத்தும், தன் திருவடியை தொடர்ந்து பூஜிக்க வாய்ப்பு தந்தும், வன்மனத்தை நீக்கி உயர்ந்த பண்புள்ள தாய்மை குணத்தை தந்தருள்வான் முருகப்பெருமான். முருகப்பெருமான் திருவடியே கதியென்று நம்பி பூஜை செய்கின்ற மக்களுக்கே இந்த வாய்ப்பை அருள்வான் முருகப்பெருமான். சான்றோன் நட்பே ஆன்ற துணையாகும்