குரு உபதேசம் 4565
அகத்தீசனை வணங்கிட: பூஜை செய்வதற்குரிய அறிவும் புண்ணியம் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் பெறலாம்.
அகத்தீசனை வணங்கிட: பூஜை செய்வதற்குரிய அறிவும் புண்ணியம் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் பெறலாம்.
அகத்தீசனை வணங்கிட: எந்த உடம்பு காமத்திற்கு காரணமாக இருக்கின்றதோ அந்த உடம்பே ஞானத்திற்கும் காரணமாக உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
முருகப்பெருமானை வணங்கிட: யோகத்துக்கும், ஞானத்திற்கும் தலைவன் முருகப்பெருமானே. முருகப்பெருமான் அன்றி, மனிதர்கள் வாசி நடத்தி கொடுப்பது என்பதெல்லாம் வெறும் பொய்யென்றும், ஏமாற்று வேலை என்றும், அவர்களை முருகப்பெருமான் தண்டிப்பார் என்பதையும் அறியலாம்.
அகத்தீசனை வணங்கிட: சைவஉணவை மேற்கொண்டும் ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்றவர்க்கும், அன்னதானம் செய்கின்ற மக்களுக்கும்தான் வாசி வசப்படுகின்ற வாய்ப்பை அகத்தீசன் தருவார் என்று அறியலாம்.
அகத்தீசனை வணங்கிட: உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடித்தவர்கள் தான் ஞானிகள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கிட: தயை குணம்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதை அறியலாம். சீலமாம் முருகனின் திருவடி போற்றிட காலத்தை வெல்ல கருத்தும் தோன்றுமே. சீலமாம் முருகனின் திருவடி போற்றிட தூல சூட்சுமம் கைவசமாமே.
அகத்தீசனை வணங்கிட: மும்மலத்தால் ஆன உடம்புதான் தொடர் பிறவிக்கு காரணம் என்பதை அறிந்து மும்மலத்தை நீக்கிக் கொள்ளலாம்.
முருகப்பெருமானை வணங்கிட: எந்தெந்த வகையில் தொடர் பிறவி ஏற்படும் என்றும், அதற்கு காரணம் என்ன என்பதையும் அறிந்து நீக்கிக் கொள்ளலாம். நிலையில்லாத உடம்பை பெற்ற நாம் முருகன் அருளால் நிலையில்லாத உடம்பை நிலையான உடம்பாக உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறியலாம். முருகப்பெருமான் திருவடியே வேதம் என்றும், அவன் நாமஜெபமே தவம் என்றும், அவனது நாமமே மந்திரம் என்றும், அவனது ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும், அதில் வெற்றி பெறுவதே ஞானம் என்றும் அறிந்து கொள்ளலாம். காரண குருவான கந்தனைப் … Read more