குரு உபதேசம் 4557
அகத்தீசனை வணங்கிட: அகத்தீசனை பூஜை செய்திட செய்திட, பொறிபுலன்கள் நமக்கு விரோதமாக செயல்படாமல் அவற்றை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதே தவம் என்பதை அறியலாம்.
அகத்தீசனை வணங்கிட: அகத்தீசனை பூஜை செய்திட செய்திட, பொறிபுலன்கள் நமக்கு விரோதமாக செயல்படாமல் அவற்றை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதே தவம் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட: இப்பிறப்பு, மறுபிறப்பு, மீண்டும் பிறவாமை ஆகிய இரகசியங்களை முதன் முதலில் அறிந்து வென்று பிறவாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். பசியின் கொடுமையால் உணவினது பெருமையையும், வறுமையின் கொடுமையால் செல்வத்தின் பெருமையையும், காமவிகாரத்தின் கொடுமையால் பெண்ணின் பெருமையையும், நோயின் கொடுமையால் மருத்துவரின் பெருமையையும் அறிந்து தெளிவது போல கடைத்தேற விரும்பி முயற்சி செய்து முன்னேற விரும்புகின்றபோது ஆன்மீக வழிதனை அறிய முற்படும் முயற்சிகளினால் முருகனின் பெருமையை உணரலாம். அன்றி முயற்சி … Read more
முருகனை வணங்கிட: ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அச்செயலைப் பற்றி சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுத்து செய்பவன் புண்ணியவான் என்றும், ஒரு செயலை செய்துவிட்டு அதன் பின் அச்செயலைப் பற்றி சிந்தித்து பார்ப்பவன் சாதாரண மனிதன் என்றும், ஒரு செயலைச் செய்துவிட்டு அச்செயலினைப் பற்றியோ அச்செயலின் விளைவைப் பற்றியோ சற்றும் சிந்திக்காமல் இருப்பவன் விலங்கினத்திற்கு ஒப்பானவன் என்பதையும் அறிந்து, இதில் நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதையும் அறிந்து முருகனது திருவடிகளைப் பற்றி பூசித்து பூசித்து செயலைச் செய்வதற்கு … Read more
அகத்தீசனை வணங்கி பூஜைகள் செய்து : உணவிலே மென்மை, உள்ளத்திலே மென்மை, செயலிலே மென்மை, சொல்லிலே மென்மை, பார்வையிலே மென்மை, நடையிலே மென்மை (பணிவுடன் நடத்தல்) என ஆறுவகையான மென்மையான பண்புகளை அறிந்து கொள்ளலாம். அந்த ஆறு வகையான மென்மைப் பண்புகளை வாழ்விலே கடைப்பிடிக்கும்படியான அறிவையும் பெறலாம். மென்மையே சைவமாகும் என்றும் உணவிலே சைவமாக, சிந்தையிலே சைவமாக, செயலிலே சைவமாக, சொல்லிலே சைவமாக, பார்வையிலே சைவமாக, நடந்து செல்வதிலே பிறர் மனம் புண்படாது நடந்து செல்கின்ற நடையிலே … Read more
அகத்தீசனை வணங்கிட: ஒரு செயலை செய்ய முற்படும்போதே அந்த செயல் தனக்கும், தன்னை சார்ந்தோர்க்கும், பொதுவிலும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையுமா என ஆராய்ந்து பார்க்கும் அறிவினை பெறலாம்.
அகத்தீசனை வணங்கிட: உண்மை பக்தி எதுவெனில் ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூசிப்பதே என்பதையும், அதுவே இவ்வுலகினில் எல்லாவற்றிற்கும் மேலான சிறந்த பக்தி நெறியாகும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கிட: புண்ணியவான்கள்தான் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற முடியும் என்பதை அறியலாம். வாழும் கலையை வழங்கிய முருகனை நாளும் போற்றியே நலம் பெறுதல் நலமே! கனிவேலன் தந்த கனிவான தமிழை கனியாக்கி தருதல் கடனே! நஞ்சை அமுதாக்கிய நாயகன் முருகனை நெஞ்சில் நினைக்க நினைத்தவை சித்தியே!
அகத்தீசனை வணங்கிட: பிற உயிர்கள் அஞ்சி நடுங்கும்படி செய்கின்றவனுக்கு, தான் அஞ்சி நடுங்கும்படியான சூழ்நிலை வரும் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட: சுத்தம், அசுத்தத்தை அறிந்து அசுத்தத்தை நீக்கி சுத்தி செய்து, சுத்த தேகத்தைப் பெற்று சதகோடி சூரிய பிரகாசமுள்ள ஒளி தேகமாக மாற்றிக் கொண்டவன் முருகனே என்றும், அவனே அருட்பெருஞ்ஜோதி வடிவினாகி நின்றனன் என்பதையும், அறிவதோடு உடல் மாசு நீங்கினாலன்றி உயிர் மாசு நீங்காது என்றும், உடல் மாசு நீங்கினால் உயிர்மாசும் நீங்கி, அறிவு தெளிவாகி செம்பொருள் அறிவாகி என்றும் அழியாத பேரின்ப நிலையான மரணமிலாப் பெருவாழ்வையும் முற்றுப்பெற்ற உண்மை ஞானத்தையும் அதுவே தரும் என்பதையும் … Read more