குரு உபதேசம் 4563
முருகப்பெருமானை வணங்கிட: யோகத்துக்கும், ஞானத்திற்கும் தலைவன் முருகப்பெருமானே. முருகப்பெருமான் அன்றி, மனிதர்கள் வாசி நடத்தி கொடுப்பது என்பதெல்லாம் வெறும் பொய்யென்றும், ஏமாற்று வேலை என்றும், அவர்களை முருகப்பெருமான் தண்டிப்பார் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4562
அகத்தீசனை வணங்கிட: சைவஉணவை மேற்கொண்டும் ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்றவர்க்கும், அன்னதானம் செய்கின்ற மக்களுக்கும்தான் வாசி வசப்படுகின்ற வாய்ப்பை அகத்தீசன் தருவார் என்று அறியலாம்.
குரு உபதேசம் 4561
அகத்தீசனை வணங்கிட: உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடித்தவர்கள் தான் ஞானிகள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4560
முருகப்பெருமானை வணங்கிட: தயை குணம்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதை அறியலாம். சீலமாம் முருகனின் திருவடி போற்றிட காலத்தை வெல்ல கருத்தும் தோன்றுமே. சீலமாம் முருகனின் திருவடி போற்றிட தூல சூட்சுமம் கைவசமாமே.
குரு உபதேசம் 4559
அகத்தீசனை வணங்கிட: மும்மலத்தால் ஆன உடம்புதான் தொடர் பிறவிக்கு காரணம் என்பதை அறிந்து மும்மலத்தை நீக்கிக் கொள்ளலாம்.
								

