Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 544

அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம் அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 544   அகக்கடை முதல் புணர்ப்பு அதனால் அகக்கணம் அகத்திடை வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   உள்ளத்தின் எல்லையிலிருந்து ஆரம்பம் வரை உள்ள எல்லா நிலைகளையும் ஒன்றிணைத்து உள்ளத்தில் இயங்கக்கூடிய நியதிகளின் தொகுதியை  உள்ளுக்குள்ளேயே  அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி!

தினம் ஒரு அகவல் 542

அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம் அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 542   அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம் அகத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி   உள்ளே மற்றும் வெளியே உள்ள இயக்கங்களின் எல்லையிலிருந்து ஆரம்பம் வரை அனைத்தையும் இணைத்து, அதன் இயக்க விதிகளை நம்முடைய உள்ளத்திலேயே நிலைக்கும்படி அமைத்த அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 540

புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும் அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 540   புறத்தியல் கடைமுதல்  புணர்ப்பால் புறத்துறும் அறக்கணம் வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   வெளி உலகத்தின் இயக்கத்தில், அதன் எல்லையிலிருந்து ஆரம்பம் வரை உள்ள அனைத்தையும் இணைத்து, அந்த வெளி உலகிலே உள்ள  அறத்தின் விதிகளை அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 538

புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 538   புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புற அறக்கணம் வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   கணம் – கூட்டம் / தொகுதி   புணர்ப்பு – பொருந்துதல் / இணைத்தல் வெளி உலகுக்கும் அப்பாற்பட்ட வெளியின் எல்லையிலிருந்து ஆரம்பம் வரை உள்ள அனைத்தையும் இணைத்து, அந்த எல்லையற்ற வெளியிலும் கூட அறத்தின் இயக்க விதிகளை அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி!

தினம் ஒரு அகவல் 536

புகலரு மகண்ட பூரண நடுவால் அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 536   புகல் அரும் அகண்ட பூரண நடுவால் அகநடு வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   புகல் அரு – சொல்வதற்கு முடியாத சொல்லி விளக்க முடியாததும், எல்லையற்றதும், முழுமையானதுமான பரம்பொருளின் மையச் சக்தியால், உள்ளத்தின் இயக்கத்தை ஒழுங்குறப் பிரித்து அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 534

புறநடு வதனாற் புறப்புற நடுவை அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 534   புறநடு அதனால் புறப்புற நடுவை அறம்உற வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   வெளி உலகத்தின் மையத்தில் தான் நிலைத்திருப்பதன் காரணமாக, அந்தச் சக்தியைக் கொண்டு, அந்த வெளி உலகுக்கும் அப்பாற்பட்ட (புறப்புறம்) வெளியின் மையத்தையும் கூட தர்மம் தவறாதபடி, ஒழுங்குடன் அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 532

அகப்புற நடுவா லணிபுற நடுவை அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 532   அகப்புற நடுவால் அணிபுற நடுவை அகப்பட அமைத்த  அருட்பெருஞ்ஜோதி   உள்ளே மற்றும் வெளியே உள்ள அனைத்துக்கும் மையமாகத் தான் இருப்பதால், அந்தச் சக்தி மூலமாக, வெளி உலகத்தின் மையத்தை (இயக்கத்தை) கூட உள்ளடக்கமாக  நிலைநிறுத்தி அருளிய அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 530

அகநடு வதனா லகப்புற நடுவை அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 530   அகநடு அதனால் அகப்புற நடுவை அகம்அற வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   உள்ளத்தின் நடுவே தான் நிலைத்திருப்பதன் காரணமாக, உள்ளே மற்றும் வெளியே உள்ள அனைத்துக்கும் மையமாக இருக்கும் நிலையை, உள்ளம்  விட்டு நீங்காத வண்ணம் அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி!

தினம் ஒரு அகவல் 528

அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 528   அகநடு புறத்தலை அணைந்து அகப்புறக்கடை அகலிடை வகுத்த  அருட்பெருஞ்ஜோதி   உள்ளத்தின் நடுவே இருந்தும், புறத்தின் முதன்மையான இடத்தில் பொருந்தி இருந்தும், உள்ளேயும் வெளியேயும் உள்ள எல்லாவற்றின் முடிவிலும் நிலைபெற்று, இந்தப் பரந்த விரிந்த உலகத்தில் ஒழுங்குறப் பிரித்து அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி!